1. கூண்டதனை உடைத்தெழுந்த சிங்கம் போலக் குளிர்பொதிகைத் தென்தமிழே ; சீறி வா வா '' என தமிழை வாழ்த்தியவர் யார்?
2.கீழ்கணட கூற்றுகளில் தவறானது எது? 1) உத்தம சோழன் திருத்துறைப் பூண்டி அருகே தீவாம்மாள் புரத்தைத் சேர்ந்தவர் . 2)மனித தீவுகள்,குருவி மறந்த வீடு உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகளை எழுதியுள்ளார் 3)’தொலைதூர வெளிச்சம்’ ‘கசக்கும் இனிமை’ ‘கனல் பூக்கள்’ உள்ளிட்ட புதினங்களை எழுதியுள்ளார். 4)உத்தம சோழன் 12 ஆண்டுகளாக நடத்தி வரும் திங்களிதழ் ‘கிழக்கு வாசல் உதயம்’ ஆகும் .
3.’பிறகொருநாள் கோடை’ எனும் கவிதை இடம் பெற்றுள்ள நூல் எது?
4. ‘அஞ்ஞாடி’ எனும் புதினத்துக்காக பூமணி சாகித்ய அகாடமி விருது பெற்ற ஆண்டு?
5.கீழ்கண்டவற்றுள் பக்தவச்சல பாரதி எழுதிய நூல்களுள் தவறானது எது ?
6. புதுக்கவிதையில் அங்கத்தை மிகுதியாக பயன்படுத்தியவர் எனக் குறிப்பிடப்படுபவர் யார்?
7.'' ஐயாண் டெய்தி மையாடி அறிந்தார் கலைகள் '' -என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
8. மில்டனின் ‘சுவர்க்க நீக்கத்தை’ தமிழில் மொழி பெயர்த்தவர் யார்?
9. பாடல் வைப்பு முறையில் பாடல் எண்ணிற்கு ஏற்ப திணைகள் வரிசையாக வைத்து தொகுக்கப்பட்ட நூல் எது?
10. இந்தியாவின் முதல் பொது நூலகம் எது?
11.எழுதும் போது ஏற்படும் பிழைகளைக் எத்தனை வகைகளாகப் பிரிக்கலாம் ?
12.கீழ்கண்ட எந்த நூலில் " இலக்கியத்தின் நோக்கம் அல்லது அறிவியல் சார்ந்த கருத்து நிலைகள்,உருவாக்கத்தின் போதே சரிவர இணைந்திருக்க வேண்டும் என்பதனை சுட்டிக்காட்டியுள்ளது ?
13." ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும் -எனும் பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல் ?
14.கீழ்க்கண்ட தொடரில் தவறானது எது? 1.குறிஞ்சிக்கலியில் காளைகளில் பல இனங்களைக் காட்டுகிற சொற்கள் நிரம்பிக் கிடக்கின்றன. 2. கி.ராஜநாராயணன் ‘கிடை’ எனும் குறுநாவலில் ஆடுகளின் அடையாளங்களை பல பெயர்கள் சொல்லி அழைக்கிறார்.
15."புவி வெப்பமடைதல் மனிதன் உருவாக்கிக் கொண்ட சிக்கலே " எனக் கூறும் இங்கிலாந்தை சேர்ந்த அறிவியல் கருத்தாளர் கீழ்க்கண்டவர்களில் யார்?
16.கூற்றுகளை ஆராய்க ? (1)வேற்றுமைப்புணர்ச்சியில் லகரத்தைத் தொடர்ந்து வல்லினம் வரின் லகரம் றகரமாய்த் திரிவதுண்டு. (2)ளகரத்தைத் தொடர்ந்து வல்லினம் வரின் ளகரம் டகராமத் திரிவதுண்டு. (3)வருமொழி தகரமாயின் லகரம் றகரமாக மாறுவதோடு தகரமும் றகரமாக மாறும். (4)அல்வழியில், தனிக்குறிலடுத்த லகரம் தகரம் வரும் போது ஆய்தமாக மாறும் தகரமும் றகரமாடும்.
17.UNFCC என்பதன் விரிவாக்கம் என்ன ?
18.ஐக்கிய நாடுகள் மற்றும் அவை எந்த ஆண்டு ரியோடி ஜெனிரோவில் காலநிலைமாற்றம் மற்றும் திட்டப் பேரவையை உருவாக்கியது ?
20.சேர நாட்டு மருமக்கள் தாயமுறை பற்றி கூறும் நூல் எது ?
21." உயர் தினை என்மனார் மக்கட் சுட்டே அஃறினை என்மனார் அவரல பிறவே " எனும் பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல்
22.கீழ்கண்ட கூற்றுகளில் சரியானது எது ? 1.உபாத்தியாயர் ஒன்றை சொல்ல அதை மாணவர்கள் பலரும் சேர்ந்து சொல்வது " முறை வைப்ப " தென்று பெயர். 2.சுவடிகளில் உள்ள எழுத்துக்கள் செவ்வனே தெரிவதற்காக சுவடியில் வசம்பு, மஞ்சள் மணத்தக்காளியிலைச்சாறு அல்லது ஊமத்தை இளைச்சாறு, மாவிலைக்கரி, தர்ப்பைக்கரி முதலியவற்றை கூட்டி செய்தமையை தடவுவார்கள் என்பர்.
23.வெள்ளக்கால் ப.சுப்பிரமணியனார் படித்த திண்ணைப் பள்ளிக்கூடம் எது ?
24.உ.வே.சா வின் ‘இலக்கிய கட்டுரைகள்’ என்ன தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளது ?
25.பல்லாவரத்தில் உள்ள பல்லவர் குடைவரை கோவில் யாருடைய காலத்தில் அமைக்கப்பட்டது ?
26.வெண்பா அடிவரையில் தவறானதை தேர்வு செய்க
27.கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது ? 1.பன்னிரு திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகள் திருஞான சம்பந்தரால் பாடப்பட்டுள்ளது. 2.திருஞான சம்பந்தரின் பாடல்கள் இசைப்பாடல்களாகவே திகழ்கின்றன. 3.இப்பாடல்களைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி.
28.சென்னை நகராட்சி உருவாக்கப்பட்ட ஆண்டு ?
29.உப்பு விளையும் களத்திற்கு பெயர் என்ன ?
30.மயிலைப் பதிகத்தில் காணப்பெறும் விழாக்களில் தவறானது எது ?
31." இரட்டை அர்த்தங்கள் மாண்டு போகவில்லை " எனும் நூலின் ஆசிரியர் யார் ?
32.கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானது எது ? 1.மிகப்பழைய காலத்தில் நம் நாட்டில் உபாத்தியாயருடைய வீடே பள்ளிக்கூடமாக இருந்தது. 2.உபாத்தியாயருடைய வீடு பள்ளிக்கூடம் ஆக இருந்ததை ‘குருகுலம்’ என்பார்கள். 3.கணக்காயர் என்பது உபாத்தியாபர் பெயர். 4.கணக்கு என்பது நூலின் பெயர்.
33.கீழ்கண்டவர்களில் ‘மகிபாலன்பட்டி நடேசனார்’ திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தவர் யார் ?
34.சாலைப் போக்குவரத்து உதவி தொலைபேசி எண் என்ன ?
35." விண்வேறு விண்வெளியில் இயங்குகின்ற வெண்மதியும் வேறு செங்கதிரும் முதிலும் வேறு " – என்ற பாடல் வரியின் ஆசிரியர் யார்?
36.கீழ்க்கண்டவற்றுள் தவறான இணை எது ?
37." முளரி மருங்கின் முதியோள் சிறுவன் "…. என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது ?
38.கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது ? 1.ஜலாலுதீன் ரூமியின் கவிதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலவற்றை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவர் ‘கோல்மன் பார்க்ஸ்’ 2.ஜலாலுதீன் ரூமியின் கவிதைகளை தமிழில் ‘தாகங்கொண்ட மீனொன்று’ என்ற தலைப்பில் மொழியாக்கம் செய்தவர் என்.சத்தியமூர்த்தி
39.நடுவண் அரசு எப்போது தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தை அமைத்துள்ளது ?
40.கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது ? 1)உத்தம சோழன் எழுதிய ‘முதல் கதை’ தஞ்சைச் சிறுகதைகள் எனும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது 2)உத்தம சோழனின் இயற்பெயர் கரிகாலன்
41.சிற்பி பாலசுப்பிரமணியம் எழுதிய நூல்களுள் தவறானது எது ?
42." ஆசிரிய நடைத்தே வஞ்சி; ஏனை வெண்பா நடைத்தே கலி " – எனும் பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது ?
43." கடந்தடு தானை மூவிருங்கூடி உடன்றனிர் ஆயினும் பறம்பு கொளற்கரிதே " எனும் பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது ?
44. ’கவிகேசரி சாமி தீட்சிதர்’ என்பவர் ‘வம்சமணி தீபிகை’ எனும் நூலை வெளியிட்ட ஆண்டு ?
45.பரலி சு.நெல்லையப்பர் பற்றிய கூற்றுகளில் தவறானது எது ?
46.வெண்பா எத்தனை வகைப்படும் ?
47.மறைமலையடிகள் ‘ஞானசாகரம்’ எனும் இதழை நடத்த தொடங்கிய ஆண்டு ?
48.சிதம்பரத்தில் உள்நாட்டுச் சந்தைக்கு பொருள்களை எடுத்துச்செல்லும் சிறு வணிகர் கூட்ட ஓவியம் எந்த நூற்றாண்டைச் சார்ந்தது ?
49.பத்துப்பாட்டு நூல்களில் புறம் சார்ந்த நூல் எது ?
50.கீழ்க்கண்டவற்றுள் தவறானதை தேர்வு செய்க
25) ans: முதலாம் மகேந்திரவர்மன்.
Page no. 106