இன்றைய ராசி பலன் 21-01-21| Today Astrology

0
263
இன்றைய ராசி பலன்கள் 21-01-21
பன்னிரண்டு ராசிக்காரர்களுக்குமான இன்றைய பொதுப்பலன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
இந்த நாள் அனைவருக்கும் இனிய நாளாக அமைய தமிழ்மடல் வாழ்த்துகிறது.

1.மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்றார் உறவினர்களிடம் நிதானமாக பேசுவது மிகவும் நல்லது. தேவையற்ற வாக்குவாதங்களை ஈடுபட்டால் மன அமைதி சீர்குலைய வாய்ப்புகள் உண்டு. கணவன்-மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியான பணப்புழக்கம் சீராக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரியுடன் இணக்கம் தேவை. பெண்களுக்கு கவனச்சிதைவு ஏற்பட வாய்ப்புகள் உண்டு என்பதால் எச்சரிக்கை தேவை.
2.ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் குடும்பத்தாரின் ஆதரவு கிடைக்கப் பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் ஒப்படைக்கப்படும். உங்கள் பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தினால் முன்னேற்றம் காணலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் உற்சாகமான மனநிலையில் இருப்பார்கள். பெண்களுக்கு லாபம் உண்டாக ஆடம்பரத்தை தவிர்ப்பது நல்லது.
3.மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய பலம் எது என்பதை அறிந்து செயல்பட கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. நீண்டநாள் எதிர்பார்ப்புகள் நிறைவேற கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களுடைய திறமை மீது மற்றவர்களில் நம்பிக்கை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எடுக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். பெண்களுக்கு மனோபலம் கூடும்.
4.கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் இருந்துவந்த குழப்பங்களுக்கு முடிவு பிறக்கும். கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் தீரக் கூடிய வாய்ப்பு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் இடத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். உங்களுடைய பேச்சுக்கு முன்னுரிமை கொடுப்பார்கள். தொழில் மற்றும் வியாபார ரீதியான கடன்கள் குறைவதற்கான வழி பிறக்கும்.
5.சிம்மம் 
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் நிதானம் மற்றும் பொறுமை தேவைப்படக்கூடிய நாளாக அமைய இருக்கிறது. நீங்கள் எடுக்கும் முயற்சிகள் சரியா? தவறா? என்கிற புரிதலில் குழப்பநிலை நீடிக்கும் என்பதால் எதையும் யோசித்து முடிவெடுப்பது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மந்த நிலை காணப்படும். தொழில் மற்றும் வியாபார ரீதியான பிரச்சனைகள் விலகி நன்மைகள் நடக்கும். பெண்களுக்கு நினைத்த காரியங்கள் நிறைவேறும்.
6.கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் சாதுரியமான நடவடிக்கைகளால் நிறைய மாற்றங்கள் நல்லவையாக அமையும். தொழில் மற்றும் வியாபார ரீதியான வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கணிசமாக உயரும் வாய்ப்புகள் உண்டு. புதிய வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்வதன் மூலம் முன்னேற்றம் காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுமை தேவை. பெண்கள் இறை வழிபாட்டில் ஆர்வம் செலுத்தினால் மன அமைதி கிடைக்கும்.
7.துலாம் 
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய வேடிக்கையான பேச்சாற்றல் மற்றவர்களை ஈர்க்கும் வண்ணம் இருக்கும். சிந்தனையில் தெளிவும் தீர்க்கமான முடிவெடுக்கும் திறனும் வளரும். பெற்றோர்களுக்கு பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலை மேலோங்கி காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளிடம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் பணிபுரியும் பணியாட்களிடம் தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது நல்லது. பெண்களுக்கு அமைதி தேவை..
8.விருச்சிகம் 
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எண்ணிய எண்ணமெல்லாம் ஈடேற்றும் கூடிய அற்புதமான அமைப்பாக இருக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான ஆதரவு வலுப்பெறும். நேற்று நேரத்தில் கிடைக்க வேண்டிய தொகை கிடைக்கப்பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைப்பதில் சிக்கல்கள் நீடிக்கும். உங்களுடைய முயற்சிகளுக்கு காலதாமதமான பலன் கிடைக்கும். பெண்களுக்கு சேமிப்பின் அற்புதம் புரியும்.
9.தனுசு 
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு இருந்துவந்த கவலைகள் நீங்கி உற்சாகம் பிறக்கும். திருமணம் போன்ற சுப காரியங்கள் கை கூடி வரும் யோகமுண்டு. பெண்களுக்கு நீண்டநாள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்க போராடுவீர்கள். தொழில் மற்றும் வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகள் டென்ஷனை ஏற்படுத்தலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
10. மகரம் 
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளில் மனதிற்கு பிடித்தவர்கள் உடைய ஆதரவு கிடைக்கும். வெளியூர் மற்றும் வெளிநாடு போன்ற விஷயங்களில் சுபச் செய்திகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் லாபத்தை நோக்கி பயணிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆலோசனை முன்னேற்றத்தைக் கொடுக்கும் வகையில் அமையும். பெண்களுக்கு யோகமான அமைப்பாக இருக்கிறது.

11.கும்பம் 
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் புது உற்சாகம் பிறக்க கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. நீண்டநாள் இழுபறியில் இருந்த தொகைகள் கைக்கு வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு என்பதால் எச்சரிக்கை தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் ஆதரவு மனதிற்கு உற்சாகத்தைக் கொடுக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பெண்கள் உங்களுடைய தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்வது உத்தமம்.

12.மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதையும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எந்த ஒரு முடிவையும் எடுக்கக் கூடாது. தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் சீராக அமையும். கணவன் மனைவிக்கு இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் வந்து மறையும். ஆரோக்கிய ரீதியான விஷயங்களில் எச்சரிக்கை தேவை. பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூல பலன் உண்டாகும்.
 இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.
.