இன்றைய இராசிபலன் (24-09-2022) | Today’s Rasipalan

0
378
24 செப்டம்பர் 2022 சனி கிழமை
தேதி
Date
7 – புரட்டாசி – சுபகிருது
சனி
இன்று
Today
மாத சிவராத்திரி
நல்ல நேரம்
Nalla Neram
07:45 – 08:45 கா / AM
04:45 – 05:45 மா / PM
கௌரி நல்ல நேரம்
Gowri Nalla Neram
10:45 – 11:45 கா / AM
09:30 – 10:30 மா / PM
இராகு காலம்
Raahu Kaalam
09.00 – 10.30
எமகண்டம்
Yemagandam
01.30 – 03.00
குளிகை
Kuligai
06.00 – 07.30
சூலம்
Soolam
கிழக்கு
Kilakku
பரிகாரம்
Parigaram
தயிர்
Thayir
சந்திராஷ்டமம்
Chandirashtamam
அவிட்டம்
நாள்
Naal
கீழ் நோக்கு நாள்
லக்னம்
Lagnam
கன்னி லக்னம் இருப்பு நாழிகை 04 வினாடி 00
சூரிய உதயம்
Sun Rise
06:03 கா / AM
ஸ்ரார்த திதி
Sraardha Thithi
சதுர்த்தசி
திதி
Thithi
இன்று அதிகாலை 03:13 வரை திரயோதசி பின்பு
நட்சத்திரம்
Star
இன்று அதிகாலை 05:20 AM வரை மகம் பின்பு பூரம்
சுபகாரியம்
Subakariyam
ஆயுதம் பழக, யாத்திரை போக, வார்படஞ் செய்ய, சுபம் பேச சிறந்த நாள்
தோற்றம்
Birth Day
24 September 1777 – இரண்டாம் சரபோஜி, தஞ்சாவூர் மராத்திய அரசர்.
24 September 1936 – சிவந்தி ஆதித்தன், இந்தியத் தொழிலதிபர். பிறந்த நாள்

பன்னிரண்டு ராசிக்காரர்களுக்குமான இன்றைய பொதுப்பலன் கீழே கொடுக்கப்பட்டுள்ளதுஇந்த நாள் அனைவருக்கும் இனிய நாளாக அமைய தமிழ்மடல் வாழ்த்துகிறது.

1.மேஷம்

மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இன்று தொழில் வியாபாரத்தில் சற்று தொய்வு ஏற்படலாம். சிலர் வெளியூர் சென்று வரக்கூடும். அலுவலக பணியில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை கூடும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சிலர் வீட்டிற்கு தேவையான புதிய பொருட்களை வாங்குவார்கள். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி ஏற்படும்.

ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு பயணங்களால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நீண்ட நாட்களாக தீராமல் இருந்த பிரச்சினைகள் சுமுகமாக முடியும். சிலர் ஆடை, ஆபரணங்கள் வாங்குவார்கள். தம்பதிகளுக்கிடையே மனவருத்தங்கள் நீங்கி. ஒற்றுமை மேலோங்கும்.. சிலருக்கு பெண்கள் வழியில் தனலாபம் ஏற்படும். உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும்.

3.மிதுனம்

மிதுனத்தில் பிறந்தவர்கள் சிலருக்கு வீண் அலைச்சல் ஏற்படும். அதனால் உடலில் சோர்வு ஏற்படும். பிறருடன் பேசும் போது வார்த்தைகளில் கவனம் தேவை. எதிர்பார்த்த தனலாபம் கிடைக்கப் பெறுவார்கள். கலைத் தொழிலில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஒரு சிலர் புனித யாத்திரையை மேற் கொள்வார்கள்.

கடகத்தில் பிறந்தவர்களுக்கு இன்றைய தினம் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். பணியிடத்தில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்த விளங்குவார்கள். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கோர்ட்டு வழக்குகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும்.

5.சிம்மம் 

சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு சில காரிய தடைகள் ஏற்படும். சிலருக்கு உடல் மற்றும் மனதளவில் சோர்வு ஏற்படும். பணம் கொடுக்கல் – வாங்கல்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட,வேண்டும். தம்பதிகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கப் பெறுவார்கள்.

6.கன்னி

கன்னியில் பிறந்தவர்களுக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும் குடும்பத்தினரின் ஆதரவை பெறுவீர்கள் சிலர் தொலை தூர பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். பணியிடங்களில் சக பணியாளர்களிடம் கவனமுடன் பழக வேண்டும். வெளியூர் வெளிநாடுகளில் இருந்து எதிர்பார்த்த சுப செய்தி வரும். சிலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டு நீங்கும்

துலாத்தில் பிறந்தவர்களுக்கு எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். மாணவர்கள் கல்வியில் சற்று கவனமாக இருக்க வேண்டும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் அமைய தாமதம் ஆகும். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத லாபங்கள் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

8.விருச்சிகம் 

விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இன்றைய தினம் மகிழ்ச்சியான நாளாக அமையும். வாழ்க்கைத் துணையின் முழுமையான அன்பும், ஒத்துழைப்பும் கிடைக்கும். வீட்டில் குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும் .சிலர் வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவார்கள். உடல் நிலை மிக சிறப்பாக இருக்கும் உறவினர்களால் சிலருக்கு தனலாபம் ஏற்படும்.

9.தனுசு 

தனுசு பிறந்தவர்களுக்கு இன்றைய தினம் எடுக்கின்ற காரியங்களில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விரும்பிய இடத்தில் பணி மாறுதல்கள் கிடைக்கும். வரவேண்டிய பழைய கடன் தொகை சரியாக வந்து சேரும். சிலர் ஆன்மீகப் பயணங்களை மேற்கொள்வார்கள். ஒரு சிலருக்கு சிறிய அளவிலான உடல் உபாதைகள் ஏற்பட்டு நீங்கும்.

10. மகரம் 

மகரத்தில் பிறந்தவர்களுக்கு இன்றைய தினம் சந்திராஷ்டம தினமாக இருப்பதால் எந்தவிதமான புது முயற்சிகளையும் மேற்கொள்ள கூடாது. சிலருக்கு உடல் மட்டும் மனதளவில் மந்தநிலை ஏற்பட்டு நீங்கும். பணம் தொடர்பான விடயங்களில் கூடுதல் கவனம் தேவை. குடும்ப உறுப்பினர்களுக்கிடையே மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் உங்களுக்கு கிடைக்கும்.

11.கும்பம் 

கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இன்றைய தினம் சராசரி நாளாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு வேலை பளு கூடும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு மன மகிழ்ச்சி உண்டாகும். நேரடி மறைமுக எதிரிகளால் ஏற்படுகின்ற தொல்லைகள் நீங்களும். ஒரு சிலர் குடும்பத்தினருடன் வெளியூர் பயணம் மேற்கொள்வார்கள்.

12.மீனம்

மீனத்தில் பிறந்தவர்களுக்கு இன்றைய தினம் விரும்பிய காரியங்கள் நிறைவேறும். குடும்பத்தில் இருக்கின்ற பெரியவர்களின் ஆசைகள் முழுமையாக கிடைக்கும். தொழில் செய்யும் இடத்தில் யோகத்தில் இருப்பவர்களும் பிறரை ஒத்துழைத்து செல்வது நல்ல பயன் உண்டு. சிலருக்கு எதிர்பாராத பணவரவு உண்டாகும், வீட்டில் உள்ள பெண்களால் மகிழ்ச்சி ஏற்படும்.