இன்றைய இராசிபலன் (28-09-2022) | Today’s Rasipalan

0
393

பன்னிரண்டு ராசிக்காரர்களுக்குமான இன்றைய பொதுப்பலன் கீழே கொடுக்கப்பட்டுள்ளதுஇந்த நாள் அனைவருக்கும் இனிய நாளாக அமைய தமிழ்மடல் வாழ்த்துகிறது.

Original Source from : dheivegam.com

https://dheivegam.com/today-rasi-palan-28-09-2022/

1.மேஷம்

மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பாராத வகையில் சில திருப்பங்கள் ஏற்படலாம். கணவன் மனைவிக்குள் அனுசரணை தேவை. சுய தொழிலில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத நன்மைகள் நடைபெறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திடீர் நண்பர்களின் வரவு உற்சாகத்தை தரும் வகையில் அமையப் போகிறது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் புதிய முயற்சிகள் செய்வதற்கு நல்ல நாளாக இருக்கப் போகிறது. விமர்சனங்களை தாண்டிய வரவேற்பு உங்களுக்கு சாதக பலன் கொடுக்கும். சொந்த தொழிலில் உள்ளவர்கள் செய்யும் செயலில் நிதானமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுமை இருக்கும். ஆரோக்கிய ரீதியான பாதிப்புகளை உடனுக்குடன் கவனியுங்கள்.

3.மிதுனம்

மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காரியத்திலும் வெற்றி வாகை சூடப் போகிறீர்கள். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் கூட ஆதரவு கொடுப்பார்கள். சொந்த தொழிலில் இருப்பவர்களுக்கு லாபம் பெருக போகிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திடீர் உதவிகள் கிடைக்கும். வீண் அலைச்சலை தவிர்க்க திட்டமிடல் அவசியமாகும்.

கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகளை பெறுவீர்கள். எதிலும் அவசரப்படாமல் இருப்பது நல்லது. சுப காரியங்களில் வீண் அலைச்சல் உண்டாக்கலாம். கணவன் மனைவிக்குள் இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். சுய தொழில் இருப்பவர்களுக்கு புதிய பாதை பிறக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேன்மை உண்டாகும்.

5.சிம்மம் 

சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் அமைதி காணப்படும். உங்களுடைய திட்டமிட்ட முடிவுகள் அனுகூல பலன் கொடுக்கும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட விரிசல் மெல்ல மறையும். சொந்த தொழிலில் இருப்பவர்கள் உடன் இருப்பவர்களிடன் இருந்து விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. கூடவே இருந்து சிலர் குழி பறிப்பார்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மன உளைச்சல் தீரும்.

6.கன்னி

கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சுய முடிவுகள் சாதக பலன் கொடுக்கும். அடுத்தவர்களை நம்பி புதிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். கணவன் மனைவிக்குள் விரிசல் ஏற்படாமல் இருக்க விட்டுக் கொடுத்து செல்லுங்கள். சொந்த தொழிலில் இருப்பவர்கள் முன் பின் தெரியாதவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பக்தி மார்க்கம் பக்கம் மனம் திரும்பும்.

7.துலாம்

துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனதில் இருந்து வந்த குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும். பணம் பல வழிகளிலும் இருந்து வந்து உங்களுடைய பாக்கெட்டை நிரப்பும். சொந்த தொழிலில் உள்ளவர்களுக்கு உற்றார், உறவினர்களின் ஆதரவு பெருகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தேவையான நேரத்தில் நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். ஆரோக்கியம் மேம்படும்.

8.விருச்சிகம் 

விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஆரோக்கிய ரீதியான அக்கறை அதிகரித்து காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை உயர கூடுதல் ஒத்துழைப்பு தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வெளியிடப் பயணங்கள் மூலம் அனுகூல பலன் கிடைக்கும். சிலருக்குப் புதிய பொருட் சேர்க்கை ஏற்படும்.

9.தனுசு 

தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை விட மகிழ்ச்சி நிறைந்த பலன்கள் உண்டு. மலை போல் வந்த பிரச்சனையும் பனி போல் அதுவாகவே விலகிச் செல்லும். சொந்த தொழிலில் உள்ளவர்கள் உங்களுடைய சமயோசித புத்தியால் அனுகூல பலன்களை பெற போகிறீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களுடைய திறமையை நிரூபிக்க வாய்ப்புகள் பெறுவீர்கள். போட்டிகள் அதிகரிக்கும் முயற்சியை கூட்டுவது நல்லது.

10. மகரம் 

மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மனம் மகிழும் படியான நிகழ்வுகள் நடைபெறும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் புதிய பிரச்சனைகளை விவாதிக்காமல் அமைதி காப்பது நல்லது. சொந்த தொழிலில் உள்ளவர்களுக்கு பழைய நண்பர்களை சந்திக்க வாய்ப்புகள் கிட்டும். புதிய ஒப்பந்தங்களில் ஈடுபட வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வருமானம் உயர வாய்ப்பு உண்டு.

11.கும்பம் 

கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இதுவரை கிடைக்காத அங்கீகாரம் உங்களுக்கு கிடைக்க இருக்கிறது. குடும்ப உறவினர்கள் உங்களை புரிந்து கொண்டு நட்புறவு கொள்வார்கள். உங்கள் மீது சுமத்தப்பட்டிருந்த வீண் பழிகள் நீங்கும். சொந்த தொழிலில் உள்ளவர்களுக்கு வேகத்தை விட விவேகம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்கள் பல்வேறு துறைகளைப் பற்றிய ஆர்வத்தை வளர்த்துக் கொள்வீர்கள்.

12.மீனம்

மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் பல நாள் காத்திருந்த ஒரு விஷயம் நடக்கப் போகிறது. உங்கள் மனதிற்கு பிடித்தவர்கள் சில மன சங்கடங்களை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு. சுபகாரிய தடைகள் விலகும். கூட்டு முயற்சியில் எதிர்பாராத திடீர் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் சில மனக்கசப்புகள் ஏற்படலாம். எதிலும் பொறுமை காப்பது நல்லது. ஆரோக்கியம் சீராகும்.

Original Source from : dheivegam.com

https://dheivegam.com/today-rasi-palan-28-09-2022/