ஒரு நகைச்சுவை கதை – சாமர்த்திய தனம்..!

0
6101
      அமெரிக்காவில் மிகப்பெரிய வக்கீலாக இருந்த ஒருவரின் அம்மாவிடம் தொலைக்காட்சி சேனல் ஒன்று பேட்டி கீழ்க்கண்டவாறு கேட்டது. 
பேட்டியாளர்: உங்கள் பையன் இப்படி ஒரு பெரிய வக்கீல் ஆவார் என்று நீங்கள் எப்போதாவது எதிர்பார்த்தது உண்டா..? 
அம்மா: ஆமாம்… அவனுக்கு ஏழு வயது இருக்கும் பொழுது நடந்த ஒரு நிகழ்வில் அவன் வக்கீல் ஆவதற்கான சாத்தியம் இருப்பதாக நான் அப்பொழுதே கணித்து விட்டேன். 
பேட்டியாளர்: அப்படி என்ன நிகழ்வு நடந்தது..? 
அம்மா: நான் ஒரு நாள் சமையலறையில் வேலை பார்த்து கொண்டிருந்தேன். அப்பொழுது அவன் ஹாலில் பூனையோடு விளையாடிக்கொண்டிருந்தான். திடீரென்று பூனை, விச்.. விச்.. என்று சத்தம் போட்டது. 
நான் அவனிடம் சமையலறையிலிருந்து கொண்டு “பூனையின் வாலை பிடித்து இழுக்காதே..! என்று உன்னிடம் எத்தனை முறை சொல்லியிருக்கிறேன்.. பூனை இப்படி சத்தம் போடுகிறது என்று அவனிடம் கேட்டேன். 
அதற்கு அவன் “நான் ஒன்றும் பூனை வாலை பிடித்து இழுக்கவில்லை, பூனை தான், அதன் வாலை அதுவே இழுத்துக் கொண்டிருக்கிறது” என்று கூறினான். எனக்கு ஒன்றும் புரியாததால் சமையலறை சமையலறையிலிருந்து வெளிவந்து ஹாலில் பார்த்தபொழுது, ஒரு கணம் அதிர்ந்து போனேன். ஷூ காலால் எனது மகன், பூனைக்குட்டியின் வாலினை மிதித்து இருந்தான். அந்த பூனை அதன் வாலைப் பிடித்து இழுத்துக்கொண்டு கத்திக்கொண்டிருந்தது. 
இதைப் பார்த்த பொழுது, தவறு தன்மீது இருந்தும், தன் மீது தவறு இல்லாதது போல் காட்டும் சாமர்த்தியத்தை பார்த்தபோது, நான் எனது மகன் எதிர்காலத்தில் ஒரு வக்கீல் ஆவதற்கு சாத்தியம் இருப்பதாக அப்போதே கணித்துக் கொண்டேன் என்று சிரித்தபடி கூறினார்.