உஷாரய்யா உஷாரு – 4

0
466
    ஜான் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து கல்லூரி செல்ல தயாராகிக் கொண்டிருந்தான். அந்த நேரத்தில் அவனது தந்தை அவனுக்காக விலையுயர்ந்த பைக் ஒன்றினை வாங்கி கொடுத்திருந்தார். பைக்கை எடுத்துக்கொண்டு ஜான் அங்குமிங்குமாக ஓட்டி பந்தா காட்டிக்கொண்டிருந்தான். 
      அடுத்த நாள் தன் நண்பனை அழைத்துக்கொண்டு, தான் இரு கைகளை விட்டு ஓட்ட போவதாக கூறிக் கொண்டு பிரதான சாலையில் இரண்டு கைகளையும் விட்டபடி ஓட்ட தொடங்கினான். அந்த நேரத்தில் எதிர்பாராதவிதமாக எதிரே வந்த லாரியில் மோதி சம்பவ இடத்திலேயே ஜான் இறந்து போனான். 
    ஆசையாக வாங்கிக்கொடுத்த பைக் அவன் உயிரை பறித்து விட்டதை எண்ணி வேதனை கொண்டனர் அவனது பெற்றோர். இருந்த ஒரு மகனும் இழந்ததை தாங்கமுடியாத ஜானின் அம்மா வருத்தம் தாங்க முடியாமல் அடுத்த இரண்டு நாட்களுக்குள் தற்கொலை செய்து கொண்டாள். 
     இந்தியாவில் மட்டும் தினசரி 43 குழந்தைகள் சாலை விபத்தில் இறந்து போவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆதலால் குழந்தைகளுக்கு போதுமான அளவு சாலை விதிகளைப் பற்றியும், சாலை விபத்துகள் பற்றியும் தெளிவாக சொல்லிக் கொடுத்து வளர்ப்பதே நல்லது.