சுவாரசியமான சம்பவம் – நகைச்சுவை..!

0
8046
     முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன், ஒரு சமயம் இங்கிலாந்தில் நடைபெற்ற விருந்து ஒன்றில் கலந்து கொண்டிருந்தார். 
    அச்சமயம் ஆங்கிலேயர் ஒருவர் கூட்டத்தின் மத்தியில் உரையாட தொடங்கினார். பேசிக் கொண்டிருக்கும் பொழுது அவர், “இறைவனுக்கு ஆங்கிலேயர்கள் மீது தான் அன்பு அதிகம். அதனால் தான் மிகவும் ரசித்து அழகாக, வெண்மையாக எங்களை படைத்திருக்கிறார். அதனால் தான் நாங்கள் வெண்மை நிறத்தில் இருக்கிறோம்” என்று தற்பெருமையோடு பேசி முடித்தார். 
அந்த ஆங்கிலேயர் பேசி முடித்ததும் டாக்டர் ராதாகிருஷ்ணன், அந்தக் கூட்டத்திற்கு இடையே உரையாட தொடங்கினார். அப்பொழுது அவர் ஒரு குட்டி கதையை சொல்ல ஆரம்பித்தார். 
“இறைவன் ஒரு நாள் ரொட்டி சுட ஆசைப்பட்டு, அதற்கான முயற்சியில் இறங்கினார். முதல் ரொட்டியை சுட்டார். ஆனால் அது சரியாக வேகவில்லை. அதனாலே சில பேர் வெள்ளையாய் பிறந்தார்கள். 
இரண்டாவதாக ஒரு ரொட்டியை சுட்டார். அது அதிக நேரம் சுடு பட்டதால் கருகிப் போனது. அதனால் சில பேர் கருப்பாய் பிறந்தார்கள். 
இறைவன் இப்படி இரண்டு மூன்று தடவை அனுபவத்திற்கு பின்னர், மூன்றாவது ரொட்டியை மிக சரியான பக்குவத்தில் தயார் செய்தார். அது அரை வேக்காடாகவுமில்லாமல், கரிஞ்சும் போகாமல் சரியான பக்குவத்தில் தயாரானது. அதன் காரணமாகவே இந்தியர்களாகிய நாங்கள் கருப்பும் இல்லாமல் வெள்ளையும் இல்லாமல் சரியான நிறத்தில் பிறந்திருக்கிறோம்” என்று சிரித்துக்கொண்டே கூறினார். 
இதை கேட்டதும் அக்கூட்டத்தில் உள்ள அனைவரும் கலகலவென்று சிரிக்கத் தொடங்கினார்கள். முதலில் பேசிய ஆங்கிலேயருக்கு வெட்கமாய் போனது.