இளம் வயதிலேயே ஒருவர் மிகப்பெரிய கதையாசிரியர் ஆனார். அவர் அளவுக்கு யாரும் எதிர்பாராத திருப்பங்களை கதையில் வைக்க முடியாது என்று பரவலாக பேசப்பட்டது.
அந்த நேரத்தில், அவரது ஆசிரியரிடம் இதைப்பற்றி ஒருவர் கேட்டபொழுது, “அவன் என்னிடம் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே எனக்கு அவன் இப்படி ஒரு கதையாசிரியர் ஆவான் என்று அப்பவே தெரியும்..” என்று கூறினார். எப்படி என்று அவரிடம் கேட்கும்பொழுது, “நான் அவனுக்கு ஐந்தாம் வகுப்பு படிக்கும் பொழுது, “விபத்து” என்ற தலைப்பில் ஒரு கதை எழுதி வரச் சொன்னேன். மற்ற மாணவர்கள் வழக்கம்போல எதை எதையோ எழுதி வர, இவன் மட்டும் என்ன எழுதி வந்தான் தெரியுமா…!
பெயிண்டர் ஒருவர், பத்தாவது மாடியில் பெயிண்ட் அடித்துக் கொண்டிருக்கும் பொழுது துரதிஷ்டவசமாக கால் தவறி கீழே விழுந்தார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் வரும்பொழுது கீழே வைக்கோல் ஏற்றிய லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. ஆனால் துரதிஷ்டவசமாக அந்த வைக்கோல் நடுவே கடப்பாரை ஒன்று செங்குத்தாக நின்றுகொண்டிருந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த பெயிண்டர் அந்த கடப்பாரை மீது விழவில்லை. துரதிஷ்டவசமாக சாலையில் விழுந்து இறந்து போனார்.
சாதாரண ஒரு சிறிய நிகழ்வில் இப்படி எதிர்பாராத திருப்பத்தை வைக்க முடியும் என்றால் அவன் கட்டாயமாக பெரிய கதையாசிரியர் ஆவான்; என்றே நினைத்ததாக சிரித்தபடி சென்றார் அந்த ஆசிரியர்…