எட்டாம் வகுப்பு அறிவியல் கூடுதல் குறுவினாக்கள்|அளவீட்டியல்

0
600

அளவீட்டியல்

  1. மின்னோட்டம் என்றால் என்ன?
    ஒரு குறிப்பிட்ட திசையில் மின்னூட்டங்கள்(Charges) பாய்வதை மின்னோட்டம் என்கிறோம்.
    மின்னோட்டத்தின் எண் மதிப்பானது, ஒரு கடத்தியின் வழியே ஒரு வினாடியில் பாயும் மின்னூட்டங்களின் அளவு என வரையறுக்கப்படுகிறது.
    மினோட்டம் = மின்னூட்டத்தின் அளவு/காலம்
    I = Q/t
  2. வெப்பநிலை?
    ஒரு அமைப்பிலுள்ள துகள்களின் சராசரி இயக்க ஆற்றலே ‘வெப்பநிலை’ என்று வரையறுக்கப்படுகிறது.
    இதன் SI அலகு ‘கெல்வின்’.
  3. தளக்கோணம்?
    இரு நேர் கோடுகள் அல்லது இரு தளங்களின் குறுக்கு வெட்டினால் உருவாகும் கோணம் தளக்கோணம் எனப்படும். இதன் SI அலகு ரேடியன் (rad) ஆகும்.
  4. திண்மகோணம்?
    மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட தளங்கள் ஒரு பொதுவான புள்ளியில் வெட்டிக்கொள்ளும்போது உருவாகும் கோணம் திண்மக்கோணம் எனப்படும்.
  5. ஒளித்திறன்?
    ஒளிப்பாயம் அல்லது ஒளித்திறன் என்பது, ஒளி உணரப்பட்ட திறனைக் குறிக்கிறது. இதன் SI அலகு ‘லுமென்’ (lumen) எனப்படும்.
  6. ஒளிச்செறிவு?
    ஒளி மூலத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட திசையில் ஓரலகு திண்மக் கோணத்தில் வெளிவரும் ஒளியின் அளவு ‘ஒளிச்செறிவு’ எனப்படும். இதன் SI அலகு ‘கேண்டிலா’ (Cd) ஆகும்.
  7. தோராய முறை?
    ‘தோராய முறை’ என்பது ஒரு இயற்பியல் அளவை அளவிடும்போது, உண்மையான மதிப்பிற்கு மிக நெருக்கமாக அமைந்த மதிப்பைக் கண்டறியும் ஒரு வழிமுறையாகும். இது அளவிடப்பட்ட எண்ணின் இடமதிப்பை முழுமைப்படுத்துவதன் மூலம், அதனை உண்மை மதிப்பிற்கு அருகாமையிலுள்ள எண்ணாக மாற்றி மதிப்பிடும் முறையாகும்.