தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளிவைப்பு!|ஜூன் 12

0
502

வெயிலின் தாக்கம் காரணமாக ஏற்கனவே வரும் 7-6-23 அன்று பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து வெயிலின் தாக்காம் கடுமையாக இருந்து வருகிறது. இதன் காரணமாக பெற்றோர்கள் தரப்பிலும் பொதுமக்கள் தரப்பிலும் பள்ளிகள் திறப்பதை இன்னும் தள்ளிப்போட வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இது குறித்து கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் இன்று முதல்வருடன் அலோசனை நடத்தினார்.

இதன் முடிவாக வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பு வரும் 12ஆம் தேதிக்கு மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

செய்தியாளார்களை சந்தித்த அமைச்சர் திரு அன்பில் மகேஷ் வரும் ஜூன் 12 முதல் இரண்டு கட்டமாக பள்ளிகளை திறக்க அலோசனை மேற்கொள்ளப்பட்டு முதல்வரின் ஒப்புதல் பெறப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும்,

6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 12ம் தேதியும்,

1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 14ம் தேதியும்

என இரண்டு கட்டங்களாக பள்ளிகள் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.