இன்றைய ராசிபலன் (21-09-2022)

0
385

பன்னிரண்டு ராசிக்காரர்களுக்குமான இன்றைய பொதுப்பலன் கீழே கொடுக்கப்பட்டுள்ளதுஇந்த நாள் அனைவருக்கும் இனிய நாளாக அமைய தமிழ்மடல் வாழ்த்துகிறது.

1.மேஷம்

மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் காலில் சக்கரம் கட்டியது போல ஓடிக்கொண்டே இருப்பீர்கள். வேலை பளு அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் தேவையற்ற சண்டை சச்சரவுகளை இழுத்துக் கொண்டு வராதீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத நேரத்தில் சகோதரர்களின் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மன குறை நீங்கும்.

ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்காலம் பற்றிய திட்டமிடல் மேலோங்கி காணப்படும். குடும்பத்தில் தீட்டிய திட்டங்கள் தீட்டியபடி நிறைவேறும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்ப்புகள் வலுவாகும் என்பதால் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு முன்னேற்ற பாதை திறக்கும். உடல்நலம் தேரும்.

3.மிதுனம்

மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிலும் வெற்றி அடையக் கூடிய நல்ல வாய்ப்புகளை பெற போகிறீர்கள். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் தேடி அலைந்த விஷயம் உங்களை தேடி வரும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும்.

கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலம் தரக்கூடிய நல்ல பலனாக இருக்கிறது. தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும் என்பதால் அனாவசிய பயணங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். சுய தொழிலில் இருந்து வந்த தடைகள் நீங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும்.

5.சிம்மம் 

சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் அலைச்சலை சந்திக்க வேண்டிய நாளாக இருக்கிறது. வீண் விரயங்கள் வருவதற்கும் வாய்ப்புகள் உண்டு எனவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புணர்வு அதிகரித்து காணப்படும். கணவன் மனைவியுடைய சிறு சிறு சண்டை சச்சரவுகள் தோன்றி மறையும். உத்தியோகஸ்தர்களுக்கு அமைதி தேவை.

6.கன்னி

கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் வரவுக்கு மீறிய செலவுகளை கட்டுப்படுத்த முயற்சி செய்வீர்கள். கணவன் மனைவி மனப்போராட்டம் மறையும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சின்ன சின்ன பிரச்சனை வந்தாலும் அதை எதிர்த்து போராடக்கூடிய தைரியம் இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இன்று குதர்க்கமாக சிலர் பேசக்கூடும் அவர்களை தவிர்ப்பது நல்லது.

துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைக்க வேண்டாம். உங்கள் வேலையில் மட்டும் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்கள் எதிர்பாராத இடங்களில் நிதானத்தை தவறவிடாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்படலாம் கவனம் தேவை.

8.விருச்சிகம் 

விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் அவசரப்பட்டு சில முடிவுகளை எடுக்க வாய்ப்புகள் உண்டு என்பதால் பொறுமையுடன் இருப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு காலம் கடந்த சில விஷயங்கள் மீண்டும் தொடங்க ஆரம்பிக்கும். கணவன் மனைவி இதை அன்பாக பழகுவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மனவருதம் ஏற்படாமல் இருக்க விட்டுக்கொடுத்து செல்லுங்கள்..

9.தனுசு 

தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் சிறு சிறு முயற்சிகளையும் தன்னம்பிக்கையுடன் மனதை தளர விடாமல் செய்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்தபடி சிக்கல் ஆன விஷயங்கள் சமூகமாக முடியும். கணவன் மனைவி இடையே இருக்கும் பனிப்போர் மறையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு தேவை என்பதால் விட்டுக் கொடுத்து செல்லுங்கள்.

10. மகரம் 

மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை அடைந்து காட்டுவீர்கள். உங்களுடைய எதிர்பார்ப்புகளை மற்றவர்கள் மீது திணிக்காமல் இருப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு செலவு கட்டுக்குள் வரும். புதிய விஷயங்களில் ஈடுபட வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணவரத்து நன்றாக இருக்கப் போகிறது. உடல் நலனில் அக்கறை கொள்ளுங்கள்.

11.கும்பம் 

கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உறவினர்களால் விருப்பமில்லாத விஷயங்கள் நடக்கலாம். சுபகாரிய தடைகளில் இருந்து வந்த தொய்வு நிலை மாறும். உற்சாகத்துடன் காணப்படக்கூடிய நீங்கள் அலைச்சலை சந்திக்காமல் இருக்க சமயோஜிதமாக செயல்படுவது நன்மை தரும். சுய தொழிலில் லாபம் காண எதையும் அலட்சியப்படுத்த வேண்டாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நிம்மதி இருக்கும்.

12.மீனம்

மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவதற்கு வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் இருக்கக்கூடிய சிறுசிறு பிரச்சனைகளும் நீங்கி மகிழ்ச்சி பெருகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகள் சமூகமாக முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மெத்தனப்போக்கு பிரச்சனையை ஏற்படுத்தும் விழிப்புணர்வு தேவை.