இன்றைய ராசிபலன் (20-09-2022)

0
194

பன்னிரண்டு ராசிக்காரர்களுக்குமான இன்றைய பொதுப்பலன் கீழே கொடுக்கப்பட்டுள்ளதுஇந்த நாள் அனைவருக்கும் இனிய நாளாக அமைய தமிழ்மடல் வாழ்த்துகிறது.

1.மேஷம்

மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலம் தரும் நல்ல நாளாக இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் மறையும். சுப காரிய முயற்சிகளில் இருந்து வந்த அலைச்சல் அதிகரிக்கும். சுய தொழிலில் எதிர்பாராத அளவிற்கு திடீர் மாற்றங்கள் உண்டாகும் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்கள் எதையும் எதிர்பார்க்காமல் இருப்பது நல்லது.

ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிர்ஷ்டம் நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. கணவன் மனைவி இடையே இருக்கும் சிறு சிறு சண்டை சச்சரவைகள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் நினைப்பதை காட்டிலும் லாபம் அதிகரிக்க கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் பெரியவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

3.மிதுனம்

மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களை நீங்களே மட்டம் தட்டிக் கொள்ளாமல் தன்னம்பிக்கையுடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் எதையும் சாதித்து காட்ட முடியும் எனும் நம்பிக்கையை விதைத்துக் கொள்வீர்கள். கணவன் மனைவி இடையே சிறு சிறு சண்டை சச்சரவுகள் அவ்வப்போது தோன்றி மறையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நிதானம் தேவை. ஆரோக்கியம் மேம்படும்.

4.கடகம்

கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய கடமையை செய்வதில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் பணி சார்ந்த பிரச்சினைகளை சந்திக்கலாம் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்கள் நீண்ட நாள் கனவுகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். பிரிந்தவர்கள் ஒன்று சேர வாய்ப்புகள் அமையும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

5.சிம்மம் 

சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வெற்றி வாய்ப்புகள் பெருக போகிறது. கணவன் மனைவி இடையே நடக்கும் பிரச்சனை மழை போல வந்து பனி போல விலகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அமைதி தேவை, தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த விஷயங்கள் அப்படியே நடக்கும். பயணத்தில் கவனம் தேவை.

6.கன்னி

கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அருகிலும் தரும் அமைப்பாக இருக்கிறது. எதிலும் லாபம் காணக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அனுசரணையாக இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் பெருமைப்படக்கூடிய வாய்ப்புகள் உண்டு. புதிய ஒப்பந்தங்களில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அடிக்கடி அசதி ஏற்பட வாய்ப்புகள் உண்டு ஓய்வு எடுத்துக் கொள்வது நல்லது.

துலாம்:

துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பாராட்டுக்கள் குவிய கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் மெல்ல மறையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு முயற்சி திருவினையாக்கும். மனதை தளர விடாதீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத பயம் மனதில் குடிகொள்ள வாய்ப்புகள் உண்டு, குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளுங்கள்.

8.விருச்சிகம் 

விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஓய்வு தேவைப்படக்கூடிய நாளாக இருக்கப் போகிறது. உங்கள் மனதில் இருக்கும் சோர்வு நீங்க தேவையற்ற எதிர்மறை சிந்தனைகளை தவிர்த்துக் கொள்ளுங்கள். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் அதிகரிக்கும். சுயதொழியில் உள்ளவர்களுக்கு ஏற்றம் நிறைந்த நாளாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வரவை காட்டிலும் செலவு அதிகரிக்கும் என்பதால் ஆடம்பரம் செய்வதில் கவனம் செலுத்துங்கள்.

9.தனுசு 

தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அமைதி தேவை தேவையற்ற சினம் தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். கணவன் மனைவி இடையே இருக்கும் புரிதலில் விரிசல் விழ வாய்ப்புகள் உண்டு கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மற்றவர்களுடைய உதவி தேவையான சமயத்தில் கிடைக்கும் எனவே கவலை கொள்ள வேண்டாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மூன்றாம் நபர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள்.

10. மகரம் 

மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் லாபம் நிறைந்த நல்ல நாளாக இருக்கிறது. குடும்பத்தில் சகோதர சகோதரிகளுக்கு இடையே சிறு சிறு மனக்கசப்புகள் தோன்றி மறையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உழைப்பால் உயர்வு காணக்கூடிய நாளாக இருக்கிறது.

11.கும்பம் 

கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வேகத்தை விட விவேகம் தேவைப்படக்கூடிய நாளாக இருக்கப் போகிறது. எதிலும் அவசரம் இல்லாமல் நிதானமாக முடிவு எடுப்பது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே புதிய நட்பு மலர்வதற்கு வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மனசோர்வு ஏற்படலாம் கவனம் தேவை. புதிய தொழில் துவங்குபவர்களுக்கு சாதக பலன் கிட்டும். சுய தொழிலில் ஏற்றும் காணும். ஆரோக்கியம் சீராகும்.

12.மீனம்

மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இன்பம் காணக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு ஆக்கத்துடன் செயல்படக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு. உங்களுடைய தனித் திறமைகளை மேலும் வளர்த்துக் கொண்டு மெருகேற்றிக் கொள்வீர்கள்.