ஆசிரியர் ராஜகோபாலன் மீதான பாலியல் புகார் விவகாரத்தில் மேலும் சிலரிடம் விசாரணை நடத்த முடிவு

0
277

சென்னை PSBB பள்ளியில் ஆன்லைன் வகுப்பறையில் ஆபாசமாக நடந்துகொண்டது தொடார்பாக ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்படார். பள்ளி மாணவிகள் கொடுத்த பல புகார்கள் இணையத்தில் வலம் வந்தன. ஆசிரியர் அரை குறை ஆடையுடன் ஆன்லைன் வகுப்புக்கு வருவதும், மாணவிகளின் உடைகளை வர்ணிப்பதும், மாணவிகளை சினிமாவிற்கு அழைப்பதும் வகுப்பு வாட்சப் குழுவில் ஆபாச படங்களை பகிர்வதும் போன்ற பல புகார்கள் அடுக்கடுக்காக வெளிவந்தன.ஆசிரியர் தவறாக பேசிய ஸ்கிரீன் ஷாட்கள் டிவிட்டரில் வலம் வந்தன.இந்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

PSBB விவகாரம் இணையத்தில் வந்ததுமே இதுபோன்று பல பள்ளிகளில் பாலியல் வன்புணர்வு நடப்பது அம்பலம் ஆனது. சென்னை சிவசங்கர் பாபா நடத்தும் சுஷில் ஹரி பள்ளியில் சிவசங்கர் பாபா பல மாணவிகளிடம் அத்துமீறி இருப்பது பல மானவிகளால் சமூக ஊடகங்களுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் , இதனை கருத்தில் கொண்டு இதோடு சேர்ந்து மூன்று பள்ளிகளுக்கு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணைக்காக ஆஜர் ஆகும்படி சம்மன் அனுப்பியது.

இதன்படி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஆசிரியர் இராஜகோபாலனும் இன்று குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு விசாரணைக்காக கொண்டுவரப்பட்டார். ஏற்கனவே தன்னோடு வேறு சில ஆசிரியர்களும் இவ்வாறு ஈடுபடுவதாகவும், சுமார் ஐந்து ஆண்டுகளாக இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் வாக்குமூலம் கொடுத்திருந்த நிலையில் இன்று குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திடமும் இதை உறுதிபடுத்தியுள்ளார்.

அதானால் இதில் அடுத்தடுத்து வேறு யாரெல்லாம் சிக்கப்போகிறார்கள் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இராஜகோபாலன் கொடுத்த தகவலின்படி வேறு சிலரிடமும் விசாரணை செய்ய இருப்பதாக குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர் தவறாக பேசிய ஸ்கிரீன் ஷாட்கள்

Click Here