இந்தியாவின் கேவலாமான மொழி எது? சர்ச்சையில் சிக்கிய கூகிள்

0
478

இந்தியாவின் மிக மோசமான மொழி என்ற கேள்விக்கு கூகிளில் கன்னடம் என்று வந்ததால் அம்மொழி பேசும் மக்கள் கூகிள் மீது மிகுந்த அதிருப்தி அடைந்தனர்.

இந்த பிரச்சினை மெல்ல சூடு பிடித்து சமூக வலைதளங்களில் பரவத்தொடங்கியது. இதை அடுத்து பல அரசியல் தலைவர்களுக்கும் இது சென்றடைந்தது. கன்னட மக்கள் சமூக வலைதளங்களில் கூகிளை கழுவி ஊற்றினர். இதை அடுத்து அந்த பதில் கூகிள் தேடலில் இருந்து நீக்கப்பட்டது.

கர்நாடக அமைச்சர் ஒருவர் டிவிட்டரில் கூகிளை சாடி டிவிட் பதிவு ஒன்றை இட்டார்., அதில் கன்னட மொழி 2500 வருட வரலாற்று சிறப்புமிக்க மொழி அது எங்கள் பெருமை என்றும். கன்னட மக்களை இழிவுபடுத்தியதற்கு கூகிள் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லை என்றால் சட்ட நடவடிக்கை கூகிள் மீது எடுக்கப்படும் என்றும் என்றும் கோபத்தை வெளிப்படுத்தினார்.

கூகிள் தரப்பு இதை பற்றி கூறும் போது, கூகிள் தேடல் முடிவுகள் அடிக்கடி பல வித்தியாசமான விடைகளை காட்டுவது சாதாரணமாக நடப்பதுதான், அது சரியானது அல்ல என்று தெரியும், அது கூகிளின் கருத்து அல்ல , என்றாலும் மக்களின் மனது புண்பட்டதற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் விரைவில் இந்த தேடல் முடிவு சரி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அந்த தேடல் முடிவு நீக்கப்பட்டது.

இதற்கான பதில் டிவிட்டை கூகிள் முதலில் கன்னட மொழியிலும் பின்னர் ஆங்கில மொழியிலும் டிவிட் செய்தது.