SBI வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை கடைசி தேதி 30-06-21 |Link Aadhaar and PAN

0
357

ஸ்டேட் பெங் ஆஃப் இந்தியா வங்கி தங்களின் வாடிக்கையாளர்களுக்கு டிவிட்டர் மூலம் எச்சரிக்கை செய்தி ஒன்றை டிவிட் செய்திருந்தது. அதில் ” தங்களுடைய வாடிக்கையாளர்கள் வரும் ஜூன் 30ஆம் தேதிக்குள் தங்கள் ஆதார் கார்டை PAN கார்டுடன் இணைக்க வேண்டும் எனவும் அவ்வாறு இணைக்க தவறினால் உங்கள் PAN CARD முடக்கப்படும் என்றும் , PAN CARD முடக்கப்பட்டால் அவர்களின் வங்கி பரிவர்த்தனைகளும் தடை செய்யப்படும் அபாயமும் ஏற்படலாம் என தெரிவித்துள்ளது.

ஏற்கனவே மத்திய அரசு சென்ற வருடம் மார்ச் 31, 2020 க்குள் இணைக்க வேண்டும் என்றும் பின்பு லாக்டவுன் பிரச்சினை வந்ததால் ஓராண்டு கால நீட்டிப்பு செய்து மார்ச் 31, 2021 வரை அவகாசம் கொடுத்தது. இந்நிலையில் மீண்டும் மூன்று மாதங்கள் அவகாசத்தை நீட்டிப்பு செய்தது. இதன்படி வரும் ஜுன் 30, 2021 ஆதார் மற்றும் பேன் கார்டை இணைக்க கடைசி நாள் ஆகும். இது SBI போன்ற ஒரு வங்கிக்கு மட்டும் பொருந்தாமல் அனைத்து வங்கி வாடிக்கையாளர்கள் மற்றும் PAN CARD வைத்திருப்பவர்களுக்கும் பொருந்தும்.

இரண்டு நிமிடத்தில் பான் கார்டுடன் ஆதாரை இணைப்பது எப்படி? கடைசி நாள் ஜூன் 30 |LINK PAN AND AADHAAR

CLICK HERE TO KNOW