காயத்ரி ரகுராம் வீட்டு கரண்ட பில் எவ்வளவு தெரியுமா!?

0
369

முன்னாள் நடிகையும் பி.ஜே.பி ஆதரவாளருமான காயத்ரி ரகுராம் டிவிட்டரில் தி.மு.க ஆட்சியை குற்றம் சாட்டி டிவிட் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

அதில் கடைசியாக ரூபாய் 9000 மட்டுமே மின் கட்டணம் வந்ததாகவும் ஆனால் இந்த திமுக கொள்ளை ஆட்சியில் கரண்ட பில் 28000/ வந்திருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

எங்கள் வீட்டில் இருவர்தான் வசிக்கிறோம், 1 ஏ.சி , இரண்டு மின் விசிறி, ஒரு தொலைக்காட்சி, ஒரு குளிர்சாதனப்பெட்டி மட்டுமே பயன்படுத்துவதாகவும் ரீடிங் எடுக்க வராமலேயே 28000/ கட்டணம் வந்திருப்பதாகவும். ரீடிங்கை குறித்து வைக்க மின் அட்டை கேட்டதற்கு ஊழியர்கள் தர மறுப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

என்னை போன்று ஏழை மக்கள் பாதிக்கப்பட்டால் என்ன செய்வார்கள் இதற்கு முதல்வர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஆனால் பல நெட்டீசன்கள் உங்கள் வீட்டில் மோட்டார், துணி துவைக்கும் எந்திரம்,மின் அடுப்பு, ஹேர் டிரையர் , மிக்சி,கிரைண்டர் போன்ற எந்த மின்சாதன பொருட்களும் இல்லையா? ஏன் இப்படி பச்சையாக பொய் சொல்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.