இரண்டு நிமிடத்தில் பான் கார்டுடன் ஆதாரை இணைப்பது எப்படி? |LINK PAN AND AADHAAR

0
4191
how to link pan with aadhaar
pan card

பான் கார்டுடன் ஆதாரை இணைப்பதற்கு கடந்த ஆண்டு 2020, மார்ச் 31-ம் தேதியே கடைசி நாள் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில்,கொரோனா, லாக்டவுன் பிரச்சினைகளால், அதனை இணைப்பதற்கான கெடுவை பல முறை தள்ளி வைத்தது. பின்பு கடந்த 2021 மார்ச் 31 பான் மற்றும் ஆதாரை இணைப்பதற்கான கடைசி நாள் என்றும் 31-ம் தேதிக்குள் இணைக்கவில்லை என்றால் ஏப்ரல் 1 முதல் உங்களுடைய பான் கார்டு பயன்பாட்டில் இல்லை, அதாவது ‘Inoperative’ என வகைப்படுத்தப்படும் என்றும் தகவல்கள் சொல்லப்பட்டது. முறையான பான் கார்டு இல்லாமல் இருப்பது 10,000 ரூபாய்வரை அபராதத்திற்கு வழிவகுக்கும் எனவும் கூறப்பட்டது. பின்பு கடைசி தவனையாக வரும் ஜூன் 30, 2021 கடைசி கால அவகாசம் வழங்கப்பட்டு இது மீண்டும் செப்டம்பர் 30, 2021 வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது மார்ச் 31, 2022 கடைசி தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவும் நீட்டிக்கப்படலாம் என்றாலும் ஒருவேளை அபதாரம் விதிக்கப்பட்டால் நம் நிலைமை பரிதாபமாகிவிடும் அதனால் வரும்முன் காப்போம்.

இரண்டே நிமிடத்தில் பான் கார்டுடன் ஆதாரை எப்படி இணைப்பது?
மேலும் ஏற்கனவே ஆதார் கார்டு, பான் கார்டுடன் இணைத்துள்ளதா என எப்படி தெரிந்துகொள்வது?

1.முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் செல்லவும்.

லிங்கை கிளிக் செய்ததும் மேற்கண்டவாறு வருமான வரி துரையின் இணைய பக்கம் திறக்கும். அதில் உங்கள் பான் கார்டு எண் மற்றும் ஆதார் எண்னை உள்ளீடு செய்து உங்கள் பெயரையும் ஆதார் அட்டையில் உள்ளது போலவே உள்ளீடு செய்யுங்கள். உங்கள் ஆதார் அட்டையில் பிறந்த தேதி குறிப்பிடாமல் பிறந்த வருடம் மட்டும் இருந்தால்,
“I have only year of birth in my aadhaar ” என்பதை தெரிவு செய்யுங்கள், மாறாக உங்கள் ஆதார் அட்டையில் பிறந்த தேதி முழுமையாக இருந்தால் அதை தெரிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

பின்பு ” I agree to validate my aadhaar details ” என்பதை தெரிவு செய்து பின்னர் Link Aadhaar என்ற பட்டணை கிளிக் செய்யவும்.

2.நீங்கள் Link Aadhaar பட்டணைசொடுக்கியவுடன் கீழ் கண்டவாறு செய்தி காண்பிக்கப்படும். இப்போது உங்கள் ஆதார் மற்றும் பான் வெற்றிகரமாக இணைக்கப்பட்டுவிட்டது.

3.உங்கள் ஆதார் மற்றும் பான் இணைந்துள்ளதை உறுதிப்படுத்த இங்கே சொடுக்கவும் CLICK HERE

லிங்கை கிளிக் செய்ததும் மேற்கண்டவாறு திறக்கும் பக்கத்தில் உங்கள் PAN மற்றும் Adhaar எண்ணை உள்ளீடு செய்து “View Link Aadhaar Status” என்பதில் கிளிக் செய்யவும்.

உங்கள் பான் மற்றும் ஆதார் இணைக்கப்பட்டிருந்தால் கீழ்கண்டவாறு வெற்றிகரமாக இணைக்கப்பட்ட உங்கள் ஆதார் எண்ணின் கடைசி நான்கு இலக்கங்கள் திரையில் காண்பிக்கப்படும்.

Successfully linked message