கர்நாடகாவில் இரண்டு சிறுவர்களுக்கு கருப்பு பூஞ்சை தொற்று; பார்வை இழக்கும் அபாயம்!

0
142

இரண்டு சிறுவர்களும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும், அதனை சிறுவர்களின் பெற்றோர்கள் உணரவில்லை.

நாட்டில் முதல்முறையாக கர்நாடகாவில் இரண்டு சிறார்களுக்கு கருப்பு பூஞ்சை நோய்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கருப்பு பூஞ்சை அல்லது மியூகோர்மைகோசிஸ் என்று அழைக்கப்படும் தொற்றுநோய், கொரோனா பாதித்தவர்களிடையே அதிகரித்து வருகிறது. இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டோர், சர்க்கரை நோயாளிகள், அதிக ஸ்டீராய்டுகள் எடுத்துக்கொள்வோர், மூச்சுவிட சிரமப்படுவோர், கொரோனாவால் பாதித்தோர், கீமோதெரபி சிகிச்சை பெறுவோர் உள்ளிட்டவர்கள் இந்த கருப்பு பூஞ்சை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், நாட்டில் முதல்முறையாக கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட இரண்டு சிறார்களுக்கு இந்த கருப்பு பூஞ்சை நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கர்நாடகாவின் பல்லாரி மாவட்டத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமியும், சித்ரதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவனும் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் கூலித் தொழிலாளர்களின் குழந்தைகள் ஆவார்கள். தற்போதைய நிலவரப்படி இரண்டு சிறார்களும் ஒவ்வொரு கண்களை இழக்க நேரிடும் என மருத்துவ அறிக்கைகள் கூறுகின்றன.


இதுதொடர்பாக மூத்த சுகாதாரத்துறை அதிகாரி கூறும்போது, கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இரண்டு சிறுவர்களில் ஒருவர் அரசு பவுரிங் மருத்துவமனையிலும், மற்றொருவர் லேடி கர்சன் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருவரும் சிறார் நீரிழிவு (Acute Juvenile Diabetes) நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.