கோவிட்-19 தொற்றால் பண நெருக்கடியா? வீட்டிலிருந்தபடியே பணம் சம்பாதிக்க 7 எளிய வழிகள்!

0
80

ஆன்லைன் வகுப்பு மூலம் படிப்புகளை சொல்லி தருவது என ஆன்லைனில் பணம் சம்பாதிப்பதற்கான வழிகளை அதிகமானோர் தேடுகின்றனர்

கோவிட்-19 தொற்றால் பண நெருக்கடியா? வீட்டிலிருந்தபடியே பணம் சம்பாதிக்க 7 எளிய வழிகள்!

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பலர் வருமான இழப்பை சந்தித்து வருகின்றனர். இப்போது மொபைல் மூலம் அனைவரும் கையிலேயே இன்டர்நெட் வசதியை பெற்றிருப்பதால் குறிப்பாக இந்த தொற்று காலத்தில் வீட்டிலிருந்தே வேலை செய்து வருமானம் ஈட்டுவது, ஆன்லைன் வகுப்பு மூலம் படிப்புகளை சொல்லி தருவது என ஆன்லைனில் பணம் சம்பாதிப்பதற்கான வழிகளை அதிகமானோர் தேடுகின்றனர்.இதனிடையே நீங்கள் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க இருக்கும் சில வழிகள் குறித்து தற்போது பார்க்கலாம்.

ஃப்ரீலான்ஸிங்(Freelancing):

ஆன்லைனில் சிறந்த முறையில் வருமானம் பெற சிறந்த வழிகளில் ஒன்று, ஃப்ரீலான்ஸிங் முறையில் ஒரு நிறுவனத்திற்கு வேலை பார்த்து கொடுப்பது. ட்ரான்ஸ்கிரிப்ஷன், காப்பி ரைட்டிங், கிராஃபிக் டிசைனிங், வீடியோ என்ஹான்சிங், கோடிங், அட்வெர்டைசிங், மார்க்கெட்டிங், போட்டோகிராஃபி, டைப்பிங் போன்ற பலவற்றில் நீங்கள் ஒரு ஃப்ரீலான்ஸராக பணியாற்றலாம். இதற்காக இந்தியா மற்றும் உலகம் முழுவதும் ஏராளமான வெப்சைட்டுகள் இருக்கின்றன. Chegg India, Freelance India, Freelancer, Upwork, Fiverr உள்ளிட்ட ஏராளமான வெப்சைட்கள் வீட்டிலிருந்தே பணம் சம்பாதிக்கும் ஃப்ரீலான்ஸ் வேலைவாய்ப்பை பெற்று தருகின்றன. இவ்வளவு மணி நேரம் வேலை செய்தால் இவ்வளவு ஊதியம் அல்லது திறன், படிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியோ பல்வேறு தளங்களுக்கு ஏற்ப சம்பளம் இருக்கும். இந்த சம்பளம் நீங்கள் அவர்களுக்கு அளிக்கும் வங்கி கணக்கு அல்லது வேறு முறைகளில் உங்களை வந்தடையும்.


இன்ஃப்ளுயன்சர் (influencer):

இன்ஸ்டா உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இன்ஃப்ளுயன்சராக இருப்பது மிக பெரிய ஒரு டீல் என்றே சொல்லலாம். ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தில் அல்லது வணிகத்தில் குறிப்பிடத்தக்க நபர்கள் மற்றும் பிரபலங்களுடன் கூடிய ஃபாலோயர்களை ஆன்லைனில் கொண்ட ஒரு நபர் இன்ஃப்ளுயன்சர் ஆவார். உதாரணமாக உங்கள் இன்ஸ்டாகிராம் ப்ரொஃபைல் / பேஜில் நீங்கள் ஒரு பெரிய அளவில் ஃபாலோயர்களை கொண்டிருந்தால், நீங்கள் ஒரு இன்ஃப்ளுயன்சராக மாறி, உங்கள் இன்ஸ்டாகிராம் பதிவுகள் மற்றும் வீடியோக்கள் மூலம் நிறைய பணம் சம்பாதிக்கலாம். விளம்பரப்படுத்தப்பட்ட பதிவுகள், தயாரிப்பு மதிப்பீடுகள், டெம்ப்லெட் ப்ரமோஷன்ஸ், பட விளம்பரங்கள், அஃபிலேட் ஆன்லைன் மார்க்கெட்டிங் மற்றும் பர்சனலைஸ்ட் மெர்ச்சன்டைஸ் ப்ரமோஷன் மூலம் நீங்கள் பெரிய தொகையை சம்பாதிக்கலாம். 10 லட்சம் ஃபாலோயர்ஸ் வரை வைத்திருப்போர் மெகா இன்ஃப்ளுயன்சர் ஆவர். இவர்கள் ஒரு போஸ்ட்டிற்கு 3 முதல் 4 லட்சம் வரை கூட வருமானம் ஈட்ட முடியும்.

ப்ளாகிங் மற்றும் விலாகிங் (Blogging/Vlogging)

ஒரு Blog-ஐ நடத்துவது என்பது சில ஆண்டுகளுக்கு முன் வரை ஒரு பொழுது போக்கு விஷயமாகவே இருந்தது. ஆனால் தற்போது அது வீட்டிலிருந்து கொண்டே வேலை செய்வதன் மூலம் பணம் சம்பாதிப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்றாக தற்போது மாறி விட்டது. உடற்பயிற்சி, வாழ்க்கை முறை, ஃபேஷன், சுகாதாரம், கல்வி அல்லது தனிப்பட்ட நிதி என இன்று உலகில் இருக்கும் அத்தனை தலைப்புகளிலும் அல்லது விஷயத்திலும் ஆன்லைனில் ஒரு Blog-ஐ காண முடிகிறது. நீங்கள் ஆர்வமுடன் இருக்கும் அதே சமயம் நிபுணத்துவம் பெற்ற ஒரு தலைப்பை தேர்வு செய்து அது குறித்து எழுத்தாகவோ அல்லது வீடியோவாகவோ போஸ்ட் செய்வதன் மூலம் பார்வையாளர்களை கவர்ந்திழுத்து அதன் மூலம் பணம் சம்பாதிக்க ஒரு எளிய அற்புதமான வழி இது. வேர்ட்பிரஸ், பிளாகர், டம்ப்ளர், மீடியம், கோஸ்ட், ஸ்கொயர்ஸ்பேஸ் போன்ற பல இலவச பிளாகிங் தளங்கள் உள்ளன. இதில் வருமானம் மற்றும் ஃபாலோயர்களை பெற முயற்சி மற்றும் நேரம் எடுக்கும்.

அமேசான் அசோசியேட்ஸ் ஆன்லைன் (Amazon Associates Online)

blog-ஐ இயக்கும் போது அஃபிலேட் ஆன்லைன் மார்க்கெட்டிங் மூலம் வரும் பண வருமானத்தை போல, அமேசான் ஹைப்பர்லிங்க்கள் மற்றும் கட்டண வருமானத்துடன் பணம் சம்பாதிக்கலாம். அமேசான் அசோசியேட்ஸ் என்பது ஒரு ஆன்லைன் மார்க்கெட்டிங் திட்டம், இது உங்கள் வெப்சைட் அல்லது வெப்பிளாகில் ஹைப்பர்லிங்க்களை உருவாக்க மற்றும் வீட்டிலிருந்து வேலை செய்வதன் மூலம் பரிந்துரை கட்டணங்களை (referral fees ) சம்பாதிக்க அனுமதிக்கிறது.

ஆன்லைன் ட்யூட்டரிங் (Online tutoring)

உங்களுக்கு கற்பித்தலில் ஆர்வம் இருப்பின் கூடவே கல்வித் திறமை வாய்ந்தவர்களாக இருந்தீர்கள் என்றால் வெவ்வேறு வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைனில் அவர்களுக்குண்டான கல்வியை கற்பிக்கலாம், மேலும் அவர்களின் பணிகளுக்கு அவர்களுக்கு உதவலாம். Udacity, Udemy அல்லது Lynda, போன்ற ஆன்லைன் தளங்களில் நிரல்களை கற்பிப்பதன் மூலம் அல்லது விளம்பரப்படுத்துவதன் மூலமோ அல்லது Vedantu, TutorMe, TeacherOn போன்ற ஆன்லைன் பயிற்சி தளங்களில் சேருவதன் மூலமும் சம்பாதிக்கலாம். உங்கள் அறிவு மற்றும் நீங்கள் எடுக்கும் வகுப்புகளை பொறுத்து மாதத்திற்கு ரூ.10,000 முதல் 1 லட்சம் வரை சம்பாதிக்கலாம்.

போட்காஸ்ட், ஆடியோபுக்ஸ் (Podcast, audiobooks):

கதை சொல்லும் ஆர்வமும், பொதுவிஷயங்கள் குறித்து தெளிவாக பேசும் திறனும் இருந்தால், வீட்டிலிருந்து சம்பாதிக்க வேலை செய்ய உங்கள் நன்மைக்காக நீங்கள் போட்காஸ்ட்டை பயன்படுத்தலாம். போட்காஸ்ட் என்பது அடிப்படையில் ஒரு நபர் கேட்கக்கூடிய டிஜிட்டல் ஆடியோ மற்றும் வீடியோ பதிவுகளின் டேட்டா சீரிஸ் ஆகும். சுமார் 200 மில்லியன் மாதாந்திர ஆக்டிவ் வாடிக்கையாளர்கள், 40 போட்காஸ்ட் நிறுவனங்கள் உள்ளனர். இந்த பெருந்தொற்று காலத்தில் வாடிக்கையாளர்களின் படிப்படியான அதிகரிப்பு போட்காஸ்டைத் தொடங்க உங்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பை வழங்குகிறது. ஆடியோபுக்குகளுக்காக உங்கள் குரலை அர்ப்பணித்து நீங்கள் பணம் சம்பாதிக்க முடியும். தவிர ஸ்பான்சர்ஷிப்கள், விளம்பரங்கள், சந்தாக்கள் மற்றும் தயாரிப்பு, மென்பொருள் மற்றும் தயாரிப்பு விளம்பரங்கள் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்கலாம்.

பெய்டு ஆன்லைன் சர்வேஸ் (Paid online surveys):

உங்களிடம் நிறைய நேரம் இருக்கிறது ஆனால் குறிப்பிடத்தக்க திறமை இன்றி இருக்கிறீர்களா.? கவலை வேண்டாம். உங்களாலும் ஆன்லைனில் வருமானம் ஈட்ட முடியும். இன்டர்நெட் மூலம் பணம் சம்பாதிப்பதற்கான எளிய வழிகளில் ஒன்று ஆன்லைன் சர்வே. கணக்கெடுப்புகளை நிரப்புவது (filling out surveys), வீடியோக்களை பார்ப்பது மற்றும் ஷாப்பிங் போன்ற பல செயல்களில் ஈடுபடும் யூசர்களுக்கு பணம் செலுத்துகிறது. Toluna, Telly Pulse, CashCrate ValuedOpinions, OpinionBureau, Streetbees போன்றவை சர்வேஸ்களை வழங்கும் பிற தளங்களாகும்.