கொரோனா வைரஸை தமிழகப் பெண்களின் சமையலறையிலிருந்தே விரட்டிவிடலாம். அதனால் தமிழக மக்கள், கொரோனா வைரஸ் குறித்து பயப்பட தேவையில்லை. சித்த மருத்துவம் துணையோடு இந்த வைரஸின் பாதிப்பிலிருந்து மக்கள் எளிதாக மீளலாம். அதற்கு நாம் உண்ணும் உணவோடு சில மருந்துகளையும் உட்கொள்ள வேண்டும்
நுரையீரலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும் ஆடாதொடை 5 இலைகள், சிற்றரத்தைச் சிறிதளவு, அதிமதுரம் சிறிதளவு, மிளகு 5, திப்பிலி 2 ஆகியவற்றை எடுத்துக்கொண்டு கசாயம் தயாரிக்க வேண்டும். இந்தக் கசாயத்தை வெறும் வயிற்றில் காலை நேரத்தில் பருக வேண்டும். 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 20 மிலியும் அதற்கு மேல் உள்ளவர்களுக்கு 60 மிலியும் கொடுக்கலாம்.
மதிய உணவில் இஞ்சி, பூண்டுகளை அதிகம் சேர்த்து புதினா, கொத்தமல்லி துவையல் செய்து சாப்பிடலாம். மாலையில், தூதுவாளை, மஞ்சள், சீரகம், மிளகு ஆகியவற்றை கொண்டு தூதுவாளை சூப் செய்து பருகலாம்.
அடுத்து, வாரத்தில் ஒருநாள் வாழைத்தண்டை சாப்பிட வேண்டும். வாரம் ஒரு முறை நிலவேம்பு கசாயம் குடிக்கலாம். சித்த மருத்துவக் கடைகளில் கபசூர குடிநீர், விஷ சூர குடிநீர் விற்கப்படும். அதையும் பருகினால், உங்கள் அருகே கொரோனா வைரஸ் வர பயப்படும்.
அசைவ உணவுகளை சாப்பிடக் கூடாது என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால், சுகாதாரமற்ற அசைவ உணவுகளைத்தான் சாப்பிடக் கூடாது. கொரோனா வைரஸிலிருந்து நம்மை ஆடாதொடை, தூதுவாளை, கபசூர குடிநீர், விஷ சூர குடிநீர், நிலவேம்பு ஆகியவை நிச்சயம் பாதுகாத்துக் கொள்ளும்.