இதய நோயாளிகள் கொரோனா தடுப்பூசி போடுவது அவசியம்..! ஏன் தெரியுமா..?

0
505

இதய நோயாளிகள் கொரோனா தடுப்பூசி போடுவது அவசியம்..! ஏன் தெரியுமா..?

“தடுப்பூசி போடப்பட்டவர்கள் நோய்த்தொற்றுக்கு எதிராக பாதுகாக்கப்படுகின்றனர். அவர்களை தொற்று நோய் எளிதில் தாக்காது. அப்படி தொற்றால் பாதிக்கப்பட்டாலும் பாதிப்பு குறைவாகவே இருக்கும். உடனடியாக குணமடைந்துவிடுவார்கள்.

இதய சிகிச்சை வல்லுநர்கள், கார்டியாலஜிஸ்ட் மருத்துவர்கள் கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இதய பாதிப்பு உண்டாவதாகக் கூறிவருகின்றனர். அதேபோல் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களையும் கொரோனா எளிதில் தாக்குவதாகவும் கூறியுள்ளனர்.

ஆலோசகர் இதயநோய் நிபுணர் மற்றும் இணை பேராசிரியர், ஸ்கிம்ஸ், டாக்டர் இம்ரான் ஹபீஸ் இதய நோயாளிகளுக்கு தடுப்பூசி மிகவும் அவசியம். ஏனெனில் இது கோவிட் -19 க்கு எதிரான கேடயமாக செயல்படும் என்று கூறியுள்ளார்.

இவர் தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவத்தையும், தொற்றுநோயை எதிர்த்துப் போராட இது எவ்வாறு உதவும் என்பதையும் வலியுறுத்தி வருகிறார். அவர், “தடுப்பூசி போடப்பட்டவர்கள் நோய்த்தொற்றுக்கு எதிராக பாதுகாக்கப்படுகின்றனர். அவர்களை தொற்று நோய் எளிதில் தாக்காது. அப்படி தொற்றால் பாதிக்கப்பட்டாலும் பாதிப்பு குறைவாகவே இருக்கும். உடனடியாக குணமடைந்துவிடுவார்கள். ” என்று கூறியுள்ளார்.


அவர் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் அனைவரையும் தாக்குமா என்றால் நிச்சயம் இல்லை. சரியான மருந்து மாத்திரைகளை உட்கொள்ளாமல், கட்டுப்பாடுகள் இல்லாத வாழ்க்கைமுறையை பின்பற்றுபவர்களையே பாதிக்கும் என்று கூறுகிறார். எனவே அனைவரும் கவலைப்படத் தேவையில்லை என்கிறார்.

கலிஃபோர்னியா சான் டியாகோ பல்கலைக்கழகத்தின் சமீபத்திய கண்டுபிடிப்பில், புகைபிடித்தல், உடல் பருமன், நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட பொதுவான நோய்க்காரணிகள் கொண்டிருப்பவர்களை ஒப்பிடும்போது, உடல் செயலற்ற நிலையில் இருப்பவர்களே அதிக ஆபத்தைக் கொண்டுள்ளனர். செயலற்ற நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை தேவைப்படுவதற்கும், இறப்பதற்கும் அதிக வாய்ப்புள்ளது என்றும் ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

அதோடு உட்கார்ந்த வாழ்க்கை முறை மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று கூறினார். கடந்த 10-15 ஆண்டுகளில், வாழ்க்கை முறை தொடர்பான நோய்கள் 60% நோய்களுக்கும் இறப்பு விகிதத்திற்கும் காரணமாக இருக்கின்றன.

கோவிட் -19 இலிருந்து மீட்கப்பட்ட ஏராளமான நோயாளிகள் இதய பிரச்சினைகளை சந்தித்துள்ளனர் மற்றும் ஏற்கனவே இதய பிரச்சினைகள் உள்ள நோயாளிகள் கூட அதன் விளைவுகளை சந்திந்து மறுபிறவி எடுத்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு இந்த வைரஸ் இதய பலவீனம், இதய செயலிழப்பு, பக்கவாதம் என எதையும் உண்டாக்கலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். எனவே இதய பாதிப்பு உள்ளவர்கள் இந்த பேராபத்திலிருந்து தப்பிக்க தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம் என வலியுறுத்துகின்றனர்.