கொரோனா தற்போதைய நிலவரம்

0
189

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 3,446 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 8,96,226 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 8,63,258 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 1,834 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 12,764 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று மேலும் 1,290 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையின் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 2,52,431 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 4,264 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை 1,98,49,388 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 82,078 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 1,95,23,969 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 81,467 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது 20,204 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 5,41,019 பேர் ஆண்கள் (இன்று-2,041 பேர்), 3,55,171 பேர் பெண்கள் (இன்று-1,405 பேர்). தமிழகத்தில் இதுவரை மொத்தம் 36 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.