இன்றைய ராசிபலன் (24-02-2021)

0
205

பன்னிரண்டு ராசிக்காரர்களுக்குமான இன்றைய பொதுப்பலன் கீழே கொடுக்கப்பட்டுள்ளதுஇந்த நாள் அனைவருக்கும் இனிய நாளாக அமைய தமிழ்மடல் வாழ்த்துகிறது.

1.மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் இன்றைய நாள் பொறுமை காக்க வேண்டியது மிக மிக அவசியம். எந்த ஒரு விஷயத்திலும் அவசர முடிவை எடுத்துவிட்டு, பின் வருத்தப்படுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை. முக்கியமான முடிவுகளை நாளை தள்ளிப் போடுவது உங்களுக்கு நன்மையை தரும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

2.ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமைய போகின்றது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெற கூடிய வாய்ப்பு கிடைக்கும். முன்னேற்றங்கள் நிறைந்த இந்த நாளை சந்தோஷமாக அனுபவிக்கலாம்.

3.மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று உதவி என்று கேட்காமலேயே, அடுத்தவர்கள் வந்து உங்களுக்கு உதவி செய்யப் போகிறார்கள். நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருக்கும் ஆசையை நிறைவேற்றிக்கொள்ள நல்ல வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். நிதி நிலைமை சீராக இருக்கும். சந்தோசங்கள் நிறைந்த நாளாக தான் இன்று அமையப்போகின்றது.

4.கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் துணிச்சலான நாளாக இருக்கப் போகின்றது. எந்த வேலையாக இருந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்று தைரியமாக காலை வைப்பீர்கள். உங்களுக்கு அதில் வெற்றியும் கிடைக்கும். இருப்பினும் கொஞ்சம் பொறுமையும் நிதானமும் அவசியம் தேவை என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

5.சிம்மம் 

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கணவன்-மனைவிக்கு இடையே பிரச்சனை வந்தால் யாராவது ஒருத்தர் விட்டுக் கொடுத்து விடுங்கள். வேலை செய்யும் இடத்தில் நண்பர்களிடம் வீட்டு விவகாரங்களை எக்காரணத்தைக் கொண்டும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

6.கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கப் போகின்றது. நீங்கள் எதையெல்லாம் நினைக்கின்றீர்களோ அதை எல்லாம் என்று செயல்படுத்துங்கள். நிச்சயமாக உங்களுக்கு வெற்றி தான். நீண்ட நாட்களாக வசூல் ஆகாமல் இருக்கும் கடன் தொகையைக் கூட இன்று வசூல் செய்யலாம்.

7.துலாம் 

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற பிரச்சனைகள் அவ்வப்போது வந்து போவதுமாக தான் இருக்கும். இருப்பினும் உங்களுடைய மன உறுதியால் அதை நீங்கள் சமாளித்து விடுவீர்கள். எந்த பிரச்சனையையும் முளைக்கு கொண்டு போய் குழப்பிக்கொள்ள வேண்டாம். நாளை சரியாகிவிடும்.

8.விருச்சிகம் 

விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கப்போகின்றது. உங்களுக்கு யாராவது பரிசு கொடுக்கலாம். அல்லது நீண்ட நாட்களாக வராமல் இருந்த கடன் தொகை வசூல் ஆகலாம். நல்ல வேலைக்காக போனஸ் கிடைக்கலாம். தொழிலில் எதிர்பாராத லாபம் கிடைக்கலாம். இப்படி ஏதாவது ஒரு வகையில் வருமானம் உங்கள் கைகளை வந்து சேரும்.

9.தனுசு 

தனுசு ராசிக்காரர்கள் இன்று உங்களது வேலையை மட்டும் செய்ய வேண்டும் அடுத்தவர்கள் என்ன சொன்னாலும் அதை உங்களது காதில் வாங்கிக்கொண்டு, அதை போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம். தேவையற்ற பழிகள் வருவதும் போவதுமாக இருந்தாலும், உங்கள் வேலையில் நீங்கள் சரியாக இருந்து கொள்ளுங்கள். அடுத்தவர்களை பற்றி சிந்திக்காதீர்கள்.

10. மகரம் 

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கொஞ்சம் அலைச்சலான நாளாக இருக்கப் போகின்றது. எதை எடுத்தாலும் இழுபறியாக இருக்கும். கொஞ்சம் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு எல்லோரையும் அனுசரித்து சென்றால், உங்களது காரியத்தை சாதித்துக் கொள்ளலாம். அனாவசியமான வார்த்தைகளை பேச வேண்டாம்.

11.கும்பம் 

கும்ப ராசிகாரர்கள் இன்று உங்களது முன்கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். மேலதிகாரிகளை அனுசரித்து தான் செல்ல வேண்டும். இருக்கின்ற வேலையை விட்டுவிட்டு, புதிய வேலையை முயற்சிக்க யோசிக்கவே யோசிக்காதீர்கள். பறக்க ஆசைப்படுவதை விட, இருப்பதை வைத்து வாழ்க்கையை காப்பாற்றிக் கொள்வது தான் புத்திசாலித்தனம்.

12.மீனம்

மீன ராசிக்காரர்கள் கொஞ்சம் சோம்பேறித்தனம் படாமல் உங்களது வேலையை சரியாக முடிக்க பாருங்கள். இன்றைக்கு நீங்கள் செய்யக்கூடிய சின்ன சின்ன தவறுகள் கூட நாளை உங்களது முன்னேற்றத்தை பாதிக்கக்கூடும். சோம்பேறித்தனம் கூடாது. எரும்பு போல நீங்கள் இருக்க பழகிக் கொள்ள வேண்டும்.