இன்றைய ராசிபலன் [19-02-21]

0
429

பன்னிரண்டு ராசிக்காரர்களுக்குமான இன்றைய பொதுப்பலன் கீழே கொடுக்கப்பட்டுள்ளதுஇந்த நாள் அனைவருக்கும் இனிய நாளாக அமைய தமிழ்மடல் வாழ்த்துகிறது.

1.மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் முயற்சிகள் உங்களுக்கு சாதகமான பலன்களை கொடுத்தாலும் ஒரு முறைக்கு இரு முறை சிந்தனை செய்து விட்டு முடிவெடுப்பது நல்லது. உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். தொழிலில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் உயரக்கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகும். ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது.

2.ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி கிடைக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில்ரீதியான பயணங்களில் மூலம் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயத்தில் நம்பி இருப்பவர்களை உங்களை ஏமாற்றுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் எச்சரிக்கை தேவை. ஆரோக்கிய ரீதியான பிரச்சினையை சமாளிக்க கூடிய ஆற்றலும் பிறக்கும்.

3.மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் முயற்சியில் அமோக லாபத்தை காணலாம். எதிர்பாராத வகைகளில் பணம் பல வழிகளில் உங்கள் தேவைக்கு வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சாப் பணியாளர்களின் ஆதரவு கிடைப்பதில் கால தாமதம் ஆகலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை நிலவும்.

4.கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முயற்சியில் சாதகப் பலன்கள் உண்டாகும். சக நண்பர்களுடன் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் கவனம் தேவை. கூடுமானவரை கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய முயற்சிகள் நல்ல பலன்களை கொடுக்கும்.

5.சிம்மம் 

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்யாமல் ஒரு முறைக்கு இரண்டு முறை சிந்தித்து செயலாற்றுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் குழப்பமான மனநிலையில் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த மந்த நிலை நீங்கி ஓரளவிற்கு சுமாரான பலன்கள் உண்டாகும்.

6.கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் நிதானம் தேவைப்படக்கூடிய நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவு கிடைத்து புதிய முயற்சிகளை மேற் கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். சுய தொழிலில் இருந்துவந்த போட்டி பொறாமைகள் குறைந்த லாபத்தை நோக்கிய பயணத்தில் ஈடுபடுவீர்கள்.

7.துலாம் 

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவனச் சிதைவு ஏற்பட வாய்ப்புகள் உண்டு. கூடுமானவரை அனைத்து விஷயங்களிலும் உன்னிப்பாக செயலாற்றுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய பெயரும் புகழும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு. உத்யோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த சலுகைகளை பெறுவதற்கு காலதாமதம் ஆகலாம்.

8.விருச்சிகம் 

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் நிதானம் தேவை. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் முன் சற்று கவனத்துடன் கையாள்வது நல்லது. ஒரு சிலருக்கு பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய ஆதரவு கூடுதலாக வாய்ப்புகள் உண்டு. வாடிக்கையாளர்கள் இடத்தில் நன்மதிப்பை பெற முயற்சி செய்வீர்கள்.

9.தனுசு 

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் சாதகமான பலன்களைக் கொடுக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு என்பதால் எச்சரிக்கை தேவை. இதுவரை உங்களுக்கு இருந்து வந்த கடன் தொகை குறைவதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். கிடைக்கக் கூடிய சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்தி முன்னேற்றத்தை காணலாம்.

10. மகரம் 

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கூடுதல் பொறுப்புடன் செயலாற்றுவது நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியான புதிய ஒப்பந்தங்களை கையெழுத்து போடும் முன் யோசிப்பது நல்லது. பெரிய முதலீடுகள் மூலம் தேவையில்லாத விரயங்கள் ஆகலாம் என்பதால் எச்சரிக்கை தேவை. கணவன் மனைவி இடையே இருந்த நெருக்கம் மேலும் அதிகரிக்கும்.

11.கும்பம் 

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உங்களுக்கு இருந்து வந்த பழைய பாக்கிகள் வசூலாக கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியாளர்களுடன் இணக்கமாக செல்வது நல்லது. சுய தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு லாபத்தை பெற புதிய உத்திகளை கையாள்வது நல்லது. விருப்பங்கள் நிறைவேற கூடிய நாளாக அமையும்.

12.மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் கைகூடி வரும் யோகமுண்டு. கணவன் மனைவி இடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கும். பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கப் பெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்பட்டாலும் பொருட் தேக்கம் பெரிதாக ஒன்றும் ஏற்படாது.