Today History 18.01.21

0
156
நிகழ்வுகள் : 18.01.2021
👉 1996ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமராவ் மறைந்தார்.
👉 1911ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி யூஜின் எலி என்பவர் தனது விமானத்தை சான் பிரான்சிஸ்கோ துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த USS பென்சில்வானியா என்ற கப்பலின் மீது இறக்கினார். கப்பலொன்றில் தரையிறக்கப்பட்ட முதலாவது விமானம் இதுவாகும்.
பிறந்த நாள் : 18.01.2021
குமாரசுவாமி புலவர்
✍ தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காக பாடுபட்ட தமிழ் அறிஞர் அ.குமாரசுவாமி புலவர் 1854ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி இலங்கையின் யாழ்ப்பாணம் அடுத்த சுண்ணாகம் என்ற ஊரில் பிறந்தார்.
✍ இவர் தன்னுடைய 5 வயதில் குலகுரு வேதாரண்யம் நமசிவாய தேசிகரிடம் ஏட்டுக்கல்வி கற்றார். மேலும் இவர் நீதி நூல்கள், யாப்பருங்கலக்காரிகை, தொல்காப்பியம் போன்றவற்றை கற்றுத் தேர்ந்தார். கவிப் பாடுவது, கட்டுரை எழுதுவது, சொற்பொழிவு நிகழ்த்துவதிலும் திறமை பெற்றிருந்ததால், ‘புலவர்’ என்று அழைக்கப்பட்டார்.
✍ ஆறுமுக நாவலரின் வண்ணார்ப்பண்ணை சைவப் பிரகாச வித்யாலயத்தில் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். வாழ்நாள் முழுவதும் அங்கு பணியாற்றினார். இவரது முனைப்பால் உயர்கல்வி நிறுவனமாக இது வளர்ச்சி அடைந்தது.
✍ 1913ஆம் ஆண்டு சென்னை மாகாண அரசு சார்பில் பாதிரியார் சாண்டிலர் தலைமையில் தயாரிக்கப்பட்ட தமிழ் அகராதியை ஆராய்ந்து திருத்தும் பொறுப்பு இவரிடம் வழங்கப்பட்டது. இவர் கூறிய அனைத்து திருத்தங்களும் அதில் சேர்க்கப்பட்டன.
✍ நகுலமலைக் குறவஞ்சி நாடகம், ஆசாரக்கோவை, நான்மணிக்கடிகை, ஆத்திச்சூடி வெண்பா, சிவசேத்திரம் விளக்கம், உரிச் சொனிகண்டு உள்ளிட்டவற்றை திருத்த உரையுடன் திறனாய்வு செய்து பதிப்பித்து வெளியிட்டுள்ளார்.
✍ ஆசிரியர், கவிஞர், கட்டுரையாளர், சமயச் சொற்பொழிவாளர் என பன்முகத் திறன் கொண்ட குமாரசுவாமி புலவர் 68வது வயதில் (1922) மறைந்தார்.