தமிழக பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை நீட்டிப்பு

0
547

26-09-2023, புதன்

தமிழகத்தில் தற்போது பள்ளிகளில் காலாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. வரும் 27ஆம் தேதிக்குள் தேர்வுகள் நடத்தப்பட்டு, 28 முதல் அக்டோபர் 2 வரை 5 நாட்கள் மட்டுமே காலாண்டு தேர்வு விடுமுறையாக அறிவிக்கப்பட்டு வரும் அக்டோபர் 3ஆம் தேதி பள்ளி மீண்டும் திறப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த 5 நாட்களிலும் சனி, ஞாயிறு என்பது வழக்கமான விடுமுறையாகவும், செப்டம்பர் 28 மிலாடி நபி மற்றும் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அரசு விடுமுறையாகவும் அமைந்ததால், காலாண்டு தேர்வு விடுமுறை என்று விசேஷமாக ஏதும் சொல்லும்படியாக இல்லாமல் இருந்தது.

இந்நிலையில் பள்ளி ஆசிரியர்களுக்கான சில சிறப்பு பயிற்சிகள் மற்றும் நாட்டு நலப்பணிகள் (NSS) சார்ந்த சில புதிய திட்டமிடல்கள் காரணமாக காலாண்டு தேர்வு விடுமுறை மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவுப்பு வெளியாகும் என அனைவராலும் ஆவலுடன் எதிபார்க்கப்படுகிறது.