Dhinam oru kural 18.01.21

0
170

குறள் : 3

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார்

மு.வ உரை :
அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்
கலைஞர் உரை :
மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.
சாலமன் பாப்பையா உரை :
மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர்.
Explanation :
They who are united to the glorious feet of Him who passes swiftly over the flower of the mind shall flourish long above all worlds