இளநரையை எளிதில் போக்கும் சிறந்த இயற்கை வைத்தியம்!

0
487
*இளநரையை எளிதில் போக்கும் சிறந்த இயற்கை வைத்தியம்!*
இளம் வயதிலேயே வெள்ளை முடி வந்துவிடுகிறது. இதற்கு *சுற்றுச்சூழல், உணவுப்பழக்கவழக்கங்கள், மன அழுத்தம் பரம்பரை* போன்றவை முக்கிய காரணங்காளாக இருக்கிறது. முடிக்கு போதிய பாராமரிப்பு வழங்காததும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
✳️தேங்காய் எண்ணெயில் சிறுது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அதனை தலை முடியில் தடவி மசாஜ் செய்து, ஊற வைத்து அலச வேண்டும். இதனால் நரைமுடி மறைய ஆரம்பிக்கும்.
✳️நெல்லிக்காயை சிறு துண்டுகளாக வெட்டி வெயிலில் உலர்த்தி, பின் அதனை எண்ணெயில் போட்டு, அந்த எண்ணெயை சூடேற்றி, ஸ்கல்ப்பில் படும்படி மசாஜ் செய்து வந்தால், வெள்ளைமுடி மறைவதை நன்கு காணலாம்.
✳️கறிவேப்பிலையை மோர் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து அதனை தலையில் தடவி அரை மணிநேரம் ஊற வைத்து பின் குளிக்க வேண்டும். இப்படி வாரம் 2 முறை செய்து வந்தால், முடியில் நல்ல மாற்றத்தைக் காண முடியும்.
✳️வெந்தயம் அரைத்து பேஸ்ட் செய்து தலைக்கு தடவி ஊற வத்து அல்லது அதனை நீரில் இரவில் படுக்கும் போது ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரைக் கொண்டு கூந்தலை அலசி வந்தால், நரைமுடி மறையும்.
✳️தயிரில் மிளகுத் தூள் சேர்த்து கலந்து அதனை தலை முடிக்கு தடவி ஊற வைத்து அலச வேண்டும். இதன் மூலமும் வெள்ளை முடி மறையும்.