இன்றைய ராசி பலன் 19-01-2021

0
260
இன்றைய ராசி பலன்கள் 19-01-21
பன்னிரண்டு ராசிக்காரர்களுக்குமான இன்றைய பொதுப்பலன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
இந்த நாள் அனைவருக்கும் இனிய நாளாக அமைய தமிழ்மடல் வாழ்த்துகிறது.

1.மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வீண் அலைச்சல்களை சந்திக்க வேண்டிய அமைப்பாக இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தேவையில்லாத செலவுகளை குறைத்துக் கொண்டால் நன்மை பெறலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு இருக்கும் போட்டி, பொறாமைகள் குறைந்து எதிர்பார்த்த லாபத்தைக் காண்பீர்கள். பெண்களுக்கு வேலை பளு கூடுதலாக இருக்கும்.
2.ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் தொடங்கும் முயற்சிகள் வெற்றி காணும் வகையில் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உடன் பணிபுரியும் சக பணியாளர்கள் மூலமாக சில நெளிவு சுழிவுகளை கற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு உங்களுக்கு கீழ் இருக்கும் பணியாளர்கள் ஆதரவு முழுமையாகக் கிடைக்கப் பெறுவீர்கள்.
3.மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவதற்கான முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத நபர்களின் உதவி கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய உத்திகள் கைமேல் பலனை கொடுக்கும். பெண்கள் குடும்பத்தில் மிகப் பெரிய பொறுப்புகளை சுமக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.
4.கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நிலுவையில் இருந்த கடன் தொகைகள் வசூலாகும். நீண்ட நாட்களாக தடைபட்டுக் கொண்டிருந்த செயல்களும் முடிவுக்கு வரும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். வாய்ப்புகளை தவறி விடுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இழந்த சில விஷயங்களை மீட்டு எடுப்பீர்கள். பெண்களுக்கு தேவைகள் பூர்த்தியாகும்.
5.சிம்மம் 
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய பலவீனத்தை அறிந்து கொள்ளும் சந்தர்ப்பங்கள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பொலிவிழந்து காணப்படுவீர்கள் என்றாலும் குறித்த வேலைகளை குறித்த நேரத்தில் செய்து முடித்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை மாறி வியாபாரம் சூடு பிடிக்கத் தொடங்கும். பெண்களுக்கு இனிய நாளாக அமையும்.
6.கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் சொன்ன சில விஷயங்கள் நடைபெறுவதை கண்டு நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும் ஒப்படைக்கப்படும். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்றாலும் பெரிதாக பிரச்சனைகள் இருக்காது. சுமூகமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவி உறவில் நெருக்கம் அதிகரிக்கும்.
7.துலாம் 
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை சமாளிக்க போராடுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து எதிர்பார்த்த தொகை கைக்கு வருவதில் காலதாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களின் ஆதரவு மனதிற்கு உற்சாகத்தை கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக அமையும். பூர்வீக சொத்துக்கள் மூலம் இருந்துவந்த பிரச்சினைகள் நீங்கப் பெறும்.
8.விருச்சிகம் 
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய சாதுரியமான முறையை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் யோகம் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு கீழ் பணிபுரியும் பணியாளர்களின் ஆதரவு முன்னேற்றத்தைக் கொடுக்கும் வகையில் அமையும்.
9.தனுசு 
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகளை சமாளிக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். தொழில் மற்றும் வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெற்றாலும் கூடுதல் கவனம் தேவை. பெரிய தொகையை ஈடுபடுத்தும் முன் ஆலோசனை செய்து கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வாகன ரீதியான பயணத்தில் எச்சரிக்கை தேவை.
10. மகரம் 
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அரசு வழி காரியங்கள் கைகூடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வங்கி கணக்கு குறைவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் எச்சரிக்கை தேவை. தந்தைவழி உறவினர்கள் மூலம் ஆதாயம் காணலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய புதிய முயற்சிகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

11.கும்பம் 
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகத்திற்கு ஒருபோதும் குறைவிருக்காது. நீண்டநாள் நண்பர்களை சந்திக்கும் வாய்ப்புகள் உண்டாகும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நற்செய்தி கிடைக்கப் பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புத்துணர்ச்சியுடன் இன்றைய நாள் அமைய இருக்கிறது.
12.மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அற்புதமான அமைப்பாக இருப்பதால் நினைத்ததெல்லாம் நடக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை மாறி சுபிட்சம் பெருகும். பணியாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதன் மூலம் சிறந்த முன்னேற்றத்தை காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற விஷயங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும்.
.