10th reduced syllabus model question paper Tamil | பத்தாம் வகுப்பு குறைக்கப்பட்ட பாடப்பகுதி மாதிரி வினாத்தாள் தமிழ்

0
1304

பத்தாம் வகுப்பு மாதிரி வினாத்தாள் 2021 – தமிழ்

பத்தாம் வகுப்பு இறுதித்தேர்வுகான குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தை சமீபத்தில் அரசு வெளியிட்டது.

To download 10th  reduced syllabus  Click Here
 இந்த குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தை அடிப்படையாக கொண்டு  பத்தாம் வகுப்பு மாதிரி வினாத்தாள் அனைத்து பாடங்களுக்கும் தமிழ்மடல் வழங்குகிறது.
இந்த மாதிரி வினாத்தாளை pdf கோப்பாக பதிவிறக்கம் செய்ய  வினாத்தாளின் கீழே கொடுக்கப்பட்டுள்ள Download லிங்கை சொடுக்கவும்.
10th Reduced Syllabus  Model Question Paper Tamil  2021- Download Here

பத்தாம் வகுப்பு
மாதிரி வினாத்தாள் 2021 – தமிழ்

பகுதி – 1 (மதிப்பெண்கள்: 15) 

குறிப்பு:

(i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

(ii) கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதுக. [15 x 1 = 15]

 

1.அருந்துணை என்பதைப் பிரித்தால் …………………

அ) அருமை + துணை

ஆ) அரு + துணை

இ) அருமை + இணை

ஈ) அரு + இணை

 

2.துரை. மாணிக்கம் என்ற இயற்பெயர் கொண்டவர் யார்?

அ) பெருஞ்சித்திரனார்

ஆ) பெரியவன்கவிராயர்

இ) தேவநேயப் பாவாணர்

ஈ) தமிழண்ணல்

 

3.‘கம்பன் இசைத்த கவியெல்லாம் நான்என்று பெருமைப்படுபவர் …………….

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) கண்ண தாசன்

ஈ) கம்பதாசன்

 

4.மெய்க்கீர்த்திக்கு முன்னோடியாய்த் திகழும் சங்க இலக்கியப்பாடல்கள்……………………….

அ) புறநானூறு

ஆ) பதிற்றுப்பத்து

இ) குறுந்தொகை

ஈ) அகநானூறு

5.கேட்க வேண்டிய பாடல், சொல்லத் தக்க செய்தி ஆகியன……………………………

அ) பெயரெச்சங்கள்

ஆ) கூட்டுநிலைப் பெயரெச்சங்கள்

இ) கூட்டுநிலை வினையெச்சங்கள்

ஈ) வினையெச்சங்கள்


6.கண்ணதாசனின் இயற்பெயர் யாது?

அ) முத்தரசன்

ஆ) முத்தையா

இ) முத்துக்குமார்

ஈ) முத்துசாமி

 

7.கேட்க வேண்டிய பாடல், சொல்லத் தக்க செய்தி ஆகியன……………………………

அ) பெயரெச்சங்கள்

ஆ) கூட்டுநிலைப் பெயரெச்சங்கள்

இ) கூட்டுநிலை வினையெச்சங்கள்

ஈ) வினையெச்சங்கள்

 

8.திருமுழுக்கு யோவானுக்கு வீரமாமுனிவர் தன் காப்பியத்தில் இட்ட பெயர்…………………………

அ) கருணாகரன்

ஆ) கருணையன்

இ) கருணாமூர்த்தி

ஈ) வலின்

 

9. மாறன் என்பான் தன்னைப் பற்றிப் பிறரிடம் கூறும்போது, இந்த மாறன் ஒரு நாளும் பொய் கூறமாட்டான் என்று கூறுவது ………………

அ) பால் வழுமமைதி

ஆ) திணை வழுவமைதி

இ) இட வழுவமைதி

ஈ) மரபு வழுவமைதி

 

10.‘அடிகள் நீரே அருளுகஎன்று இளங்கோவடிகளிடம் வேண்டிக் கொண்டவர் ……………………..

அ) கம்பர்

ஆ) கபிலர்

இ) திருத்தக்கதேவர்

ஈ) சீத்தலைச்சாத்தனார்

 

11. கறங்கு இசை விழாவின் உறந்தை என்று குறிப்பிடும் நூல் ……………………

அ) புறநானூறு

ஆ) அகநானூறு

இ) கலித்தொகை

ஈ) நளவெண்பா பாடலைப் படித்துப் பின்வரும் வினாக்களுக்கு (12, 13, 14, 15) விடை தருக.

இவைசரி யென்றால் இயம்புவதென் தொழில்

இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேலை!

ஆக்கல் அளித்தல் அழித்தல் இம் மூன்றும்

அவனும் யானுமே அறிந்தவை! அறிக!

 

12. இப்பாடலின் ஆசிரியர் யார்?

(அ) கண்ண தாசன்

(ஆ) பாரதிதாசன்

(இ) ஜெயகாந்தன்

(ஈ) பாரதியார்

 

13. முத்தொழில்கள் யாவை?

(அ) அறம், பொருள், இன்பம்

(ஆ) இயல், இசை, நாடகம்

(இ) ஆக்கல், அழித்தல், காத்தல்

(ஈ) ஆடல், பாடல், ஓடுதல்

 

14.இப்பாடல் இடம் பெற்ற அடி எதுகைகளை எழுதுக.

(அ) இவை சரி, இவை தவறு

(ஆ) சரி, தவறு

(இ) இவை, இயம்பு

(ஈ) மூன்றும், ஆறும்

 

15.இப்பாடல் இடம் பெற்ற நூல் எது?

(அ) அன்னை மொழியே

(ஆ) காசிக்காண்டம்

(இ) முல்லைப்பாட்டு

(ஈ) காலக்கணிதம்

10th Reduced Syllabus Model Question Paper Tamil 2021– Download Here 

பகுதி – II (மதிப்பெண்கள்: 18)

பிரிவு- 1

 எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க.  [4 x 2 = 8]

21 ஆவது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.

 

16.விடைக்கேற்ற வினா அமைக்க.

(அ) கம்பர் எழுதிய நூல்கள் சரசுவதி அந்தாதி, சடகோபர் அந்தாதி, திருக்கை வழக்கம், ஏரெழுபது, சிலை எழுபது முதலியன.

(ஆ) சிலப்பதிகாரத்தையும், மணிமேகலையையும் இரட்டைக்காப்பியங்கள் என வழங்குவர்.

 

17.யாருக்கு இவ்வுலகமே உரிமை உடையதாகும் எனத் திருக்குறள் குறிப்பிடுகிறது?

 

18.பாசவர், வாசவர், பல்நிண விலைஞர், உமணர் சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள் யாவர்?

 

19.எம்.எஸ் சுப்புலட்சுமியின் இசையைப் பாராட்டியோர் யாவர்?

 

20.செய்குதம்பிப் பாவலரின் கல்வி பற்றிய கருத்தினை முழக்கத் தொடர்களாக்குக.

 

21.‘இன்மையின்எனத் தொடங்கும் குறள் எழுதுக.

 

பிரிவு – 2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க.    [5 x 2 = 10]

 

22.உவமையைப் பயன்படுத்தி சொற்றொடர் அமைக்க

கண்ணினைக் காக்கும் இமை போல?   

 

23.அறுசுவை தொகைச் சொல்லைப் விரித்து எழுதி தமிழ் எண்ணுரு தருக.

 

24.கீழ்க்காணும் மரபுத் தொடருக்கான பொருளறிந்து தொடர் அமைத்து எழுதுக.

 

25.பொருத்தமான நிறுத்தக்குறிகளை இடுக.

கடுகைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத்தறித்த குறள் என இடைக்காடனார் கூறினார் போலும்.

 

 26.உரைத்த பகுபத உறுப்பிலக்கணம் தருக.

 

 27.கொடுக்கப்பட்டுள்ள இரு சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க.

சிறு சீறு

 

28.கலைச்சொற்கள் தருக.

(அ) Homograph (ஆ) Conversation 

10th Reduced Syllabus  Model Question Paper Tamil  2021- Download Here

பகுதி – III (மதிப்பெண்கள்: 18)

பிரிவு – 1

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க. [2 x 3 = 6]

 

29.பின்வரும் நிலவகைகளின் பெயர்களுக்கான காரணங்களைக் கேட்டறிந்து வகுப்பறையில் பகிர்க.

தரிசு, சிவல், கரிசல், முரம்பு, புறம்போக்கு, சுவல், அவல்.

 

30.ஜெயகாந்தன் தம் கதைமாந்தர்களின் சிறந்த கூறுகளைக் குறிப்பிடத் தவறுவதில்லை என்று அசோகமித்திரன் கூறுகிறார். இக்கூற்றை மெய்ப்பிக்கும் கூறு ஒன்றைத் தர்க்கத்திற்கு அப்பால் கதை மாந்தர் வாயிலாகக் குறிப்பிடுக.

31.உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

ஒரு மொழி பொதுமக்களாலும் அதன் இலக்கியம், புல மக்களாலும் அமையப்பெறும். தமிழ்ப் பொதுமக்கள் உயர்ந்த பகுத்தறிவுடையர். எத்துணையோ ஆராய்ச்சி நடந்துவரும் இக்காலத்திலும் எத்துணையோ மொழிகளினின்று கடன் கொண்ட ஆங்கில மொழியிலும் நூலிலும் இலையைக் குறிக்க Leaf (லீஃப் என ஒரே சொல் உள்ளது.

ஆங்கில நூல்களிலும் வேறு பல வகைகளில் இலைகளைப் பாகுபாடு செய்தனரேயன்றி, தமிழ்ப்பொதுமக்களைப் போல வன்மை மென்மை பற்றித் தாள், இலை, தோகை, ஓலை எனப் பாகுபாடு செய்தாரில்லை. இத்தகைய பாகுபாடு ஏனைய உறுப்புகளுக்குள்ளும் செய்யப்பட்டது முன்னர்க் காட்டப்பெற்றது.

(அ) தமிழ்ப் பொதுமக்கள் எத்தகைய தன்மையுடையவர்?.

(ஆ) ஆங்கில மொழியிலும், நூலிலும் இலையைக் குறிக்கப் பயன்படும் ஒரே சொல் என்ன?

(இ) இலையைக் குறிக்கும் மற்ற சொற்கள் யாவை?

பிரிவு – 2

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க.

34 ஆவது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்க வேண்டும். [2 x 3 = 6]

 

32.உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.

33.தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?

34.அடிபிறழாமல் எழுதுக.

(அ) அருளைப் பெருக்கி எனத் தொடங்கும்நீதிவெண்பாபாடல்.

(அல்லது)

(ஆ ) அன்னை மொழியே எனத் தொடங்கும் பாடல்.

 

பிரிவு – 3

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க. [2 x 3 = 6]

35.வினா வகையையும் விடை வகையையும் சுட்டுக

 

36.நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும். இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு தருக.

 

37.நிரல்நிறைப் பொருள்கோள் விவரி.

 

பகுதி – IV (மதிப்பெண்கள்: 25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க. [5 x 5 = 25]

 

38. (அ) தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான உரைக் குறிப்புகளை எழுதுக.

(அல்லது)

(ஆ) கம்பராமாயணக் கதைமாந்தர்களுள் எவரேனும் ஒருவர் குறித்து வகுப்பில் உரையாற்றுக.

 

39.(அ) உனது பகுதியில் நூலகம் அமைத்துத் தர வேண்டி விண்ணப்பம் ஒன்று வரைக.

(அல்லது)

(ஆ) பள்ளித்திடலில் கிடைத்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்ததையும் அதற்குப் பாராட்டுப் பெற்றதையும் பற்றி வெளியூரில் இருக்கும் உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.

 

40.படம் உணர்த்தும் கருத்தை நயமுற ஐந்து வரிகளில் எழுதுக.

41.வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கும் படிவம் நிரப்புக.

42.(அ) தமிழகப் பாரம்பரிய கலைகளைப் பாதுகாக்கவும் வளர்க்கவும் மேலும் பரவலாக்கவும் நீங்கள் செய்யவிருப்பனவற்றை வரிசைப்படுத்தி எழுதுக.

 (அல்லது)

 மொழிபெயர்க்க.

(அ) The Golden sun gets up early in the morning and starts its bright rays to fade away the dark. The milky clouds start their wandering. The colourful birds start twitting their morning melodies in percussion. The cute butterflies dance around the flowers. The flowers’ fragrance

fills the breeze. The breeze gently blows everywhere and makes everything pleasant.

 

பகுதி – V (மதிப்பெண்கள்: 24)

அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க. [3 x 8 = 24]

43.(அ) சங்க இலக்கியங்களில் போற்றப்பட்ட அறங்களில் உம்மைக் கவர்ந்த இரண்டு அறங்களைக் குறிப்பிட்டு, அவை நடைமுறை வாழ்வில் பொருந்துவதை விளக்குக.

 (அல்லது)

 (ஆ) மலர்ந்தும் மலராத பாதிமலர் போல

வளரும் விழி வண்ணமே – வந்து

விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக

விளைந்த கலை அன்னமே

நதியில் விளையாடி கொடியில் தலை சீவி

நடந்த இளந் தென்றலே – வளர்

பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு

பொலிந்த தமிழ் மன்றமே

 கவிஞர் கண்ணதாசனின் இப்பாடலில் தவழும் காற்றையும் கவிதை நயத்தையும் பாராட்டி உரை செய்க.

 44.(அ) அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக் கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி கொண்டு விவரிக்க. கதைக்கரு : கிராமத்து மனிதர்கள் காட்டும் விருந்தோம்பல், பகிர்ந்து கொடுக்கிற நேயம்.

 (அல்லது)

 (ஆ) மங்கையராய்ப் பிறப்பதற்கே….. எனும் தலைப்பில் எம்.எஸ்.சுப்புலெட்சுமி பற்றிய உனது கருத்தை சுருக்கமாக எழுதுக.

 45.(அ) இந்தியாவின் கணினிப் புரட்சி எனும் தலைப்பில் கட்டுரை ஒன்று எழுதுக.

 (அல்லது)

 (ஆ) குறிப்புகளைப் பயன்படுத்திக் கட்டுரை ஒன்று வரைக.

முன்னுரை முறையான ஒப்பந்தம் நீர் தேவையை சமாளித்தல் குறைபாடுகள் திட்டம் நன்மைகள் முடிவுரை.

தேசிய நதி நீர் இணைப்புத் திட்டம்

 *********

மேற்கண்ட வினாத்தாளை Pdf வடிவில்  பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள Download லிங்கை சொடுக்கவும்.

10th Reduced Syllabus  Model Question Paper தமிழ்  2021- Download Here

ஆங்கில  பாடத்திற்கான மாதிரி வினாத்தாளுக்கு இங்கே சொடுக்கவும் Click Here