இன்றைய ராசிபலன் 24-01-2021

0
294

  இன்றைய ராசி பலன்கள் 24-01-21

பன்னிரண்டு ராசிக்காரர்களுக்குமான இன்றைய பொதுப்பலன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
இந்த நாள் அனைவருக்கும் இனிய நாளாக அமைய தமிழ்மடல் வாழ்த்துகிறது.

1.மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்த்த நல்ல செய்திகள் கிடைக்கப் பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு குடும்பத்துடன் அளவிடக்கூடிய அமைப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபார ரீதியான முயற்சிகளில் நல்ல பலன் கிடைக்கும். எவரையும் எளிதில் நம்பி விடும் குணம் கொண்ட நீங்கள் பண விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.

2.ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதிலிருக்கும் குழப்பங்கள் நீங்கி தெளிவான சிந்தனை மேம்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பெரியவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். சமுதாயத்தில் உங்களுடைய மதிப்பு உயர்வதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புடன் செயலாற்றக் கூடிய அமைப்பாக உள்ளது. பலரின் பாராட்டுகளைப் பெற்று மனம் மகிழும் இனிய நாளாக அமையும்.

3.மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்றம் தரும் அமைப்பாக இருப்பதால் தொட்டதெல்லாம் துலங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை சூடுபிடிக்க துவங்கும். வாடிக்கையாளர்களை கவர்வதற்கு புதிய யுக்திகளை கையாளுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.
 
4.கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த பணவரவு திருப்திகரமாக அமையும். கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. முன்பின் தெரியாதவர்களிடம் குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்வது தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வாகன ரீதியான பயணத்தில் எச்சரிக்கை தேவை. சுய தொழிலில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் அதிகரிக்கும்.
5.சிம்மம் 
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய பொறுப்புகளை ஏற்பதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபார ரீதியான விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. உங்கள் உடன் இருப்பவர்களை உங்களுக்கு எதிராக செயல்பட வாய்ப்புகள் உண்டு என்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
 
6.கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதை எடுத்தாலும் அதில் பல குறைகளை கண்டுபிடித்து கொண்டிருக்காமல் அதனை அப்படியே ஏற்றுக் கொள்வது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புது உற்சாகம் பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த போட்டி பொறாமைகள் குறைந்து முன்னேற்றம் உண்டாகும். ஆரோக்கிய ரீதியான விஷயங்களில் எச்சரிக்கை தேவை.
7.துலாம் 
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்ட நாள் கனவுகள் நிறைவேற கூடிய அற்புதமான அமைப்பாக உள்ளது. நீங்கள் எதிர்பாரத வகையில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் சிறப்பாக அமையும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் வெற்றி தரும்.
8.விருச்சிகம் 
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கூடுதல் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வாகன ரீதியான பயணத்தில் கவனம் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். குடும்பத்தில் இருக்கும் மூத்த சகோதரர்களை அனுசரித்து செல்வது உத்தமம். கணவன் மனைவி இடையே இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும்.
9.தனுசு 
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் காலதாமதம் தரும் அமைப்பாக இருந்தாலும் எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவது அவசியம் ஆகும். சுபகாரிய முயற்சிகளில் வீண் விரயங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபார ரீதியான பயணங்களால் அனுகூலமான பலன்களை காணலாம். ஆரோக்கியம் சீராக அமையும். சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் காலதாமதம் உண்டாகும்.
10. மகரம் 
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் நிதானம் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிக பொறுமை நன்மையைத் தரும் வகையில் இருக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு வியாபார விருத்தி உண்டாக வேலையாட்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் நீடிக்கும்.

11.கும்பம் 
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணவரவு சிறப்பாக அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கை தேவை. பூர்வீக சொத்துக்கள் மூலம் ஒரு சிலருக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். கனவு கணவன் மனைவி பிரச்சினைகள் படிப்படியாக குறையும்.

12.மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கிரக அமைப்புகள் சாதகமாக இருப்பதால் சுப வைபவங்கள் கைகூடி வரும் யோகம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபார ரீதியான புதிய ஒப்பந்தங்கள் சிறப்பாக அமையும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் பொருளாதார பிரச்சனைகளை சமாளிக்க முடியும். தகுந்த சமயத்தில் உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியம் சீராக அமையும்.
 இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

.