இன்றைய ராசிபலன் 23-01-2021

0
220
இன்றைய ராசி பலன்கள் 23-01-21
பன்னிரண்டு ராசிக்காரர்களுக்குமான இன்றைய பொதுப்பலன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
இந்த நாள் அனைவருக்கும் இனிய நாளாக அமைய தமிழ்மடல் வாழ்த்துகிறது.

1.மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நன்மைகள் நடைபெறக் கூடிய அற்புதமான நாளாக இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண்பழி ஏற்பட வாய்ப்புகள் உண்டு என்பதால் எச்சரிக்கை தேவை. தொழில் மற்றும் வியாபார ரீதியான முயற்சிகள் காலதாமதம் ஏற்படும். பெண்களுக்கு வீண் அலைச்சல் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் கவனம் தேவை.
2.ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்கள் மூலம் கிடைக்க வேண்டிய நன்மைகள் கிடைக்கப்பெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு சிறப்பாக அமையும். கணவன் மனைவிக்கு இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.
3.மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய சாதுர்யமான பேச்சால் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதையும் பலமுறை யோசித்து முடிவெடுப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இணைந்து புதிய விஷயங்களை கற்பதற்கான யோகம் உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே சிறுசிறு சண்டை சச்சரவுகள் தோன்றி மறையலாம்.

4.கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய ஆடம்பர தேவைகளை குறைத்துக் கொள்வதன் மூலம் நன்மைகளை பெறலாம். பொருளாதாரத்தில் இருக்கும் ஏற்ற இறக்கங்களை சமாளிக்க போராடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் கவனம் இருக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான விஷயங்களில் மற்றவர்களின் ஆலோசனை கேட்டு முடிவெடுப்பது நல்லது.

5.சிம்மம் 
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இதுவரை இருந்து வந்த கவலைகள் நீங்கி புத்துணர்வு பிறக்கக் கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் இறை சிந்தனையில் மூழ்கி இருப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பணவரவு திருப்திகரமாக அமையும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

6.கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத வகையில் திடீர் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபார ரீதியான விஷயங்களில் சுய முடிவு எடுப்பது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மற்றவர்களால் தேவையில்லாத பிரச்சனைகள் வந்து சேர வாய்ப்புகள் இருப்பதால் எச்சரிக்கை தேவை. சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் சாதகப்பலன் உண்டாகும்.
7.துலாம் 
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய திறமையால் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களின் முயற்சிகளுக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்து அதிக லாபம் காண்பீர்கள். சக பணியாளர்களிடம் அனுசரித்துச் செல்வதால் ஏற்றம் பெறலாம். அருவி ரீதியான விஷயத்தில் எச்சரிக்கை தேவை.

8.விருச்சிகம் 
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வழக்கு போன்ற விஷயங்களில் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரலாம் என்பதால் கவனம் தேவை. சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்.
9.தனுசு 
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவை இல்லாத நபர்களிடம் வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது உத்தமம். குடும்பத்தில் மூத்தவர் களை அனுசரித்துச் செல்வதன் மூலம் மன அமைதி பெறலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு லாபம் உண்டாகும். சுய தொழிலில் ஏற்றம் இருக்கும்.
10. மகரம் 
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான விஷயங்களில் சுபச் செய்திகள் கிடைக்கப் பெறும். குடும்பத்தில் ஒற்றுமை மேம்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு மகிழ்ச்சியை உண்டாக்கும் வகையில் அமையும். தொழில் மற்றும் வியாபார ரீதியான சூழ்ச்சிகளை முறியடிக்க போராடுவீர்கள். ஆரோக்கியம் சீராக அமையும்.

11.கும்பம் 
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தின் மீதான அக்கறை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கொடுக்கப்படும் புதிய பொறுப்புகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். இதனால் பாராட்டுகளையும் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபார ரீதியான உங்களுடைய முயற்சிகளுக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். கணவன் மனைவியிடையே நெருக்கம் அதிகரிக்கும்.

12.மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். குடும்ப விஷயங்களை மூன்றாம் நபர்களிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காவிட்டாலும் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பணவரவு கிடைப்பதில் பிரச்சினை நிலவும். பெண்கள் தெய்வீக விஷயங்களில் நாட்டம் செலுத்துவார்கள்.
 இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

.