இன்றைய ராசிபலன் 22-01-2021

0
281
இன்றைய ராசி பலன்கள் 22-01-21
பன்னிரண்டு ராசிக்காரர்களுக்குமான இன்றைய பொதுப்பலன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
இந்த நாள் அனைவருக்கும் இனிய நாளாக அமைய தமிழ்மடல் வாழ்த்துகிறது.

1.மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவனமுடன் செயல்பட வேண்டியது அவசியமாகும். உத்தியோகத்திலிருப்பவர்கள் முடிவுகளை எடுக்கும் முன் ஒருமுறைக்கு பலமுறை ஆலோசனை செய்து கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் விருத்தி ஏற்படும் தொழில் மற்றும் வியாபாரத்தில் விருத்தி ஏற்படும். கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு.
2.ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுத்த முடிவுகளில் சிறப்பான பலன்களைக் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியாளர்கள் உதவிகரமாக இருப்பார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த மந்த நிலை மாறி முன்னேற்றம் உண்டாகும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு.
3.மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவலைகள் நீங்கி புத்துணர்வு பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்ப்பதும் மூலம் மன அமைதி பெறலாம். குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும்.
 
4.கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்கும் முயற்சிகளை மேற்கொள்வதில் காலதாமதம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தொந்தரவு விரக்தியை ஏற்படுத்தலாம். புதிய முயற்சிகளில் வெற்றி வாகை சூடுவீர்கள்.
5.சிம்மம் 
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமுகமான சூழ்நிலை இருக்கும். தொழில் மற்றும் வியாபார வளர்ச்சி காண முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும்.
6.கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய முயற்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் போட்டி பொறாமைகள் மறைந்து நட்பு உணர்வுடன் செயல்படுவார்கள். தொழில் மற்றும் வியாபார ரீதியான பிரச்சனைகளை சமாளிக்க நண்பர்களின் உதவியை நாடுவீர்கள்.
7.துலாம் 
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களுடைய வாக்கு சாதுர்யத்தால் பல காரியங்களை செய்து காட்டுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய இரக்க குணத்தால் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். ஆரோக்யம் சீராக இருக்கும்.
8.விருச்சிகம் 
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களை சுற்றி இருக்கும் அனைத்து பிரச்சனைகளையும் சமாளிக்க கூடிய தைரியம் பிறக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உத்தியோக உயர்வு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் பணம் தொடர்பான விஷயத்தில் மட்டும் எச்சரிக்கை தேவை.
9.தனுசு 
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் முயற்சியில் குழப்பங்கள் நீடிக்க வாய்ப்புகள் உண்டு என்பதால் எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வாகன ரீதியான பயணங்களால் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபார வளர்ச்சிக்கு புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகள் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கப் பெறும்.
10. மகரம் 
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சமுதாயத்தின் மீதான அக்கறை மேலோங்கி காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியாளர்களிடம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது மூலம் ஏற்றம் பெறலாம். புதிய விதிகளை கையாள்வதன் மூலம் முன்னேற்றம் உண்டாகும்.

11.கும்பம் 
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்த விஷயங்கள் அணைத்தபடியே நடக்கக் கூடிய அற்புதமான அமைப்பாக உள்ளது. தொழில் மற்றும் வியாபார ரீதியான பயணங்களின் மூலம் அனுகூலமான பலன்களை காணலாம். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி அதிக லாபம் காணலாம். கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி பரஸ்பர ஒற்றுமை மேலோங்கி காணப்படும்.

12.மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமைய பெற இருக்கிறது. நீண்டநாள் தடைபட்டுக் கொண்டிருந்த காரியங்கள் நடைபெற வாய்ப்புகள் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும். மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் சீராக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
 இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.
.