அண்ணா பல்கலைகழகம் தனது செமஸ்டர் தேர்வுகளுக்கான அட்டவணையை வெளியிட்ட பின் அதற்கான ஆன்லைன் தேர்வு நடைபெறும் வழிமுறைகள் மற்றும் மாணவர்களுக்கான கட்டுப்பாடுகள் என்ன என்பதை தெளிவாக அறிவுறுத்தியது. ஆண்ட்ராய்டு போன் மூலம் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்காக பிரத்யேக செயலி ( Android App) வடிவமைத்து அதை தங்கள் மொபைலில் தரவிறக்கம் செய்து பயன்படுத்துமாறு அண்ணா பல்கலைகழகம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் செமஸ்டர் தேர்வு நடைபெறும் முன்பாக ஒரு மாதிரி தேர்வு (Mock Test) எழுதி தேர்வை எதிர்கொள்ளும் வழிமுறையினை பயன்படுத்தி பார்க்கும் வாய்ப்பை மாணவர்களுக்கு அண்ணா பல்கலைகழக தேர்வு கட்டுப்பாட்டு மையம் வழங்கியது.

மாதிரி தேர்வை எதிர்கொண்ட மாணவர்கள் செயலியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பல்வேறு சிரமங்களை சந்தித்ததை தொடர்ந்து, அது போன்ற சிக்கல்கள் செமஸ்டர் தேர்வு நடத்தும்பொழுதும் வராமலிருக்க தனது செயலியை புதிய அப்டேட்டுடன் மீண்டும் வெளியிட்டுள்ளது.

பழைய செயலியை போனில் இருந்து நீக்கிவிட்டு மீண்டும் இந்த புதிய செயலியை தரவிறக்கம் செய்து பயன்படுத்துமாறு மாணவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படுள்ளது. கணிணி வழியாக தேர்வு எழுதுபவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்பதால் அவர்கள் கவலைப்பட தேவை இல்லை. மொபைல் மூலம் தேர்வு எழுதுவோர் முன்பு பதிவிறக்கம் செய்தது போலவே இம்முறையும் புதிய செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தவேண்டும்.

மொபைல் மூலம் தேர்வு எழுதுவோருக்கான வழிமுறைகளுக்கு கீழே சொடுக்கவும்.

Previous articleஅண்ணா பல்கலைகழகம் சிறப்பு அரியர் தேர்வு அட்டவணை|M.E./M.TECH./M.ARCH 2013 regulation Including Special Arrears Time Table
Next articleசளித் தொல்லையில் இருந்து நிரந்தரமாக விடுபட உதவும் சில இயற்கை வழிகள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here