அண்ணா பல்கலைகழகம் மாணவர்களுக்கு வைத்த ஆப்பு (App)

0
343
anna university
anna university, அண்ணா பல்கலைகழகம்

அண்ணா பல்கலைகழகம் மாணவர்களுக்கான் தேர்வு அட்டவணை மற்றும் தேர்வுக்கான கட்டுப்பாடுகள் ஆகியவற்றை ஏற்கனவே வெளியிட்டது.

Anna university Time Table 2021
Anna University Candidate Instruction

இதன்படி தேர்வு எழுதும் மாணவர்கள் , கணிணி மூலமாகவோ அல்லது கைபேசி மூலமாகவோ தேர்வில் பங்கு பெறலாம். 60 நிமிடங்கள் நடைபெறும் இத்தேர்வு சரியான விடையை தேர்ந்தெடுக்கும் வகையில் கேள்விகள் அமைக்கப்பட்டிருக்கும்.

இத்தேர்வில் பங்குபெறும் மாணவர்கள் தனி அறையில் அமர்ந்து தேர்வில் பங்கு பெற வேண்டும்.

360degree கேமரா கோணத்தில் வேறு நபர்களோ வேறு மின்னனு சாதனங்களோ இல்லை என கேமரா மூலம் காட்ட வேண்டும்.

தேர்வு முடியும் வரை கேமராவின் திசையை நோக்கிய நிலையில் இருக்கவேண்டும். அடிக்கடி திரும்பினாலோ அல்லது இருக்கையை விட்டு எழுந்தாலோ தேர்வு எழுதும் செயலி எச்சரிக்கை செய்யும் மேலும் இதனால் தேர்வை ரத்து செய்யவும் வாய்ப்பு உண்டு. கண்களின் அசைவையும் உன்னிப்பாக கவனிப்பார்களாம்

வேறு நபர்களின் சத்தம் மைக்கில் கேட்க கூடாது என்பதால் அமைதியான அறையில் தேர்வு எழுத வேண்டுமாம் , Noise Cancellation Mic போன்ற கருவிகளையும் தேர்வுக்கு பயன்படுத்த கூடாது.

தேர்வு எழுதும் கணிணி அல்லது மொபைலின் திரையை Screen Recording செய்வதோ அல்லது Screen Sharing முறையில் External Monitor போன்ற மற்ற உபகரணங்களுடன் பகிர்தலோ கூடாது. அதையும் தேர்வுக்கான செயலி கண்டுபிடித்துவிடும்.

Ip அட்ரஸ் முதல் நம் கணிணி அல்லது மொபைலின் அனைத்து செயல்பாடுகளும் பதிவு செய்யப்படும். சந்தேகத்திற்குறிய வகையில் என்ன நடந்தாலும் சிக்கல்தான்.

நமது செயல்பாடுகளில் ஏதேனும் மாற்றம் தெரிந்தால் உடனே அந்த செயலி கண்காணிப்பாளர்களை அலர்ட் செய்துவிடும், உடனே அவர்கள் live Chat மூலம் நம்மிடம் எதாவது கேட்டால் நாம் தகுந்த பதிலளிக்கவேண்டும். நாமாக லைவ் சேட் வசதியை பயபடுத்த முடியாது.

நமது கல்லூரி அடையாள அட்டை அல்லது வேறு அரசு அடையாள அட்டையை கேமரா மூலம் காண்பிக்க வேண்டும்.

இணைய தொடர்பு துண்டிக்கப்பட்டால் மூன்று நிமிடங்களுக்குள் மீண்டும் login செய்துகொள்ள அனுமதி உண்டு.

இது போன்ற பல கட்டுப்பாடுகளை செயல்படுத்த பிரேத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தேர்வு செயலியை அண்ணா பல்கலைகழகம் வெளியிட்டுள்ளது.

அதை எப்படி பதிவிறக்கம் செய்வது , எப்படி பயன்படுத்துவது, நமது கேமரா, திரை, இருப்பிடம், சப்தம், அனைத்தையும் அந்த செயலி பயன்படுத்த அனுமதி அளித்து தேர்வில் எப்படி முறைப்படி பங்குபெற வேண்டும் என்பது பற்றிய நீண்ட வழிமுறையை அண்ணா பல்கலைகழகம் வெளியிட்டுள்ளது.

அதனை பதிவிறக்கம் செய்ய கீழே தேவையான இணைப்பில் சொடுக்கவும்.

மொபைல் செயலி மூலம் தேர்வில் பங்கு பெருகிறவர்களுக்கான வழிமுறை

கணிணி மூலம் தேர்வில் பங்கு பெருகிறவர்களுக்கான வழிமுறை

இனி மாணவர்கள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.