இன்றைய ராசிபலன் -30/01/2021

0
541

பன்னிரண்டு ராசிக்காரர்களுக்குமான இன்றைய பொதுப்பலன் கீழே கொடுக்கப்பட்டுள்ளதுஇந்த நாள் அனைவருக்கும் இனிய நாளாக அமைய தமிழ்மடல் வாழ்த்துகிறது.

1.மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு எதிலும் நிதானம் தேவை. முன்கோபத்தை குறைத்துக் கொண்டால் மன அமைதி பிறக்கும். தேவையற்ற நபர்களிடம் அறிமுகம் தவிர்ப்பது நல்லது. சமூகத்தின் மீதான மதிப்பும், மரியாதையும் உயரக்கூடிய அற்புதமான நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்கும். சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை.மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு எதிலும் நிதானம் தேவை. முன்கோபத்தை குறைத்துக் கொண்டால் மன அமைதி பிறக்கும். தேவையற்ற நபர்களிடம் அறிமுகம் தவிர்ப்பது நல்லது. சமூகத்தின் மீதான மதிப்பும், மரியாதையும் உயரக்கூடிய அற்புதமான நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்கும். சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை.

2.ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். சகோதரர்களின் ஆதரவும் உற்சாகமும் அதிக நன்மை தரும். வியாபாரத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. பேச்சில் நிதானம் தேவை. தந்தையின் உடல் நிலையில் அதிக கவனம் தேவை. செலவுகள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.

3.மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நிம்மதியான நாளாக அமையும். எதிலும் நிதானமாக இருப்பீர்கள். திருமணம் சம்பந்தப்பட்ட அனைத்து காரியங்களிலும் சுபம் ஏற்படும். குலதெய்வ வழிபாடு மனநிம்மதியை தரும். நண்பர்களிடம் ஒற்றுமையாக இருப்பீர்கள். நீங்கள் எடுக்கும் எந்த செயல்களிலும் வெற்றி காண்பீர்கள்.

4.கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி தரும் நாளாக அமைய போகின்றது. இன்று உங்களுக்கு பண வரவு அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது. புதிய தொழில் செய்பவர்களுக்கு சிறிது நிதானம் தேவை. குடும்பத்தில் சிறுசிறு மன கசப்புகள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சிகள் மனநிறைவுடன் காணப்படும். பொருளாதாரம் பற்றாக்குறை உங்களுக்கு வந்தாலும் அதை நீங்கள் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.

5.சிம்மம் 

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி தரும் நாளாக அமையப் போகின்றது. சொத்துக்கள் வாங்குவதற்கும் விற்பதற்கும் சிறப்பான நாளாக அமைய போகின்றது. திருமணம் போன்ற சுபகாரியங்கள் உங்களுக்கு மன நிம்மதியை தரும். ஆன்மீகம் தொடர்பான காரியங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர்களுக்கு இது ஒரு சிறப்பான நாளாக அமையும். பெரியோர்களை அனுசரித்து நடப்பது மிகவும் நல்லது. நண்பர்கள் மற்றும் உறவினர்களால் நன்மை உண்டாகும்.

6.கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புகழ் அதிகரிக்கும் நாளாக அமையும். உங்களுடைய குடும்பத்தில் நீங்கள் முக்கியமான நபராக விளங்குவீர்கள். வெளிநாடுகளில் வேலை வாய்ப்புக்கள் கிடைக்கும். மாணவர்களின் படிப்பில் மிகுந்த அக்கறை தேவை. தேவைக்கேற்றவாறு செலவு செய்வது மிகவும் நல்லது.

7.துலாம் 

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் காரியங்களில் அனுகூலம் ஏற்படும். உங்களுக்கு எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது. உங்கள் மனைவி வழி உறவினர்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. உங்கள் பேச்சில் நிதானம் தேவை.

8.விருச்சிகம் 

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனநிம்மதி ஏற்படும். சுப விரயச் செலவுகள் அதிகரிக்கும் நாளாக அமையும். நீங்கள் நினைத்த வேலைகள் அனைத்தும் சுமுகமாக முடியும். பணவரவு அதிகரிக்கும். உடல் நிலை ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தாரிடம் சிறு சிறு மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. பேச்சில் நிதானம் தேவை.

9.தனுசு 

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் செய்யும் எந்த ஒரு செயலும் மனக் குழப்பத்துடன் செய்வீர்கள். எடுத்த முயற்சிகள் அனைத்தும் நன்மையில் முடியும். மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. நண்பர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் படிப்படியாக குறையும்.

10. மகரம் 

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுத்த காரியத்தை தன்னம்பிக்கையுடன் செய்து முடிக்க கூடியவராக இருப்பீர்கள். பிள்ளைகளிடம் கடுமையாக நடந்து கொள்வீர்கள். திருமணம் போன்ற சுபகாரியங்கள் சுமுகமாக முடிவுக்கு வரும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

11.கும்பம் 

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் முடிந்தவரை தொலை தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. நெருங்கிய நண்பர்களிடம் கவனம் தேவை. எளிதில் யாரையும் நம்பி விட வேண்டாம். கொடுத்த வாக்கை நிறைவேற்றும் பண்பு உங்களிடம் இயல்பாகவே இருக்கும். நீங்கள் எதைச் செய்தாலும் அதில் ஒரு நன்மை இருக்கும்.

12.மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவைக்கேற்ற பணம் உங்கள் கையில் இருந்தாலும் பணத்தை கவனமாக செலவு செய்வது நன்மையை தரும். உங்களின் அனைத்து முயற்சிக்கும் உங்கள் வாழ்க்கை துணை ஆதரவாக இருப்பார். பிள்ளைகள் மீது அன்பு செலுத்துவது மகிழ்ச்சியை தரும். இயற்கை உணவு அதிகம் எடுத்துக் கொள்வதால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.