TNPSC தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு… உங்களுக்கு கொண்டு வரப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் இது தான்..!

1
514

TNPSC போட்டி தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;

✅️போட்டி தேர்வு எழுத வருபவர்கள் இதற்கு முன் தேர்வு தொடங்கும் வரை அனுமதிக்கப்பட்டனர். இந்த முறை மாற்றப்பட்டு இனி வரும் நாட்களில் காலை 9.15 மணிக்கு பிறகு வரும் தேர்வர்கள் தேர்வுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

✅️விடைத்தாளில் பதிலளிக்கவும், குறிக்கவும் கருப்பு நிற மையிலான பால் பாயிண்ட் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஏனைய நிற மைகளை கொண்ட பேனாவுக்கு அனுமதியில்லை.

✅️விடைத்தாளில் கையெழுத்து போடுவதுடன் இடது கை பெருவிரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும்.

✅️வினாத்தாளில் விடை தெரியாத கேள்விகளுக்கு விடைத்தாளில் அதற்கென கொடுக்கப்பட்டுள்ள ஆப்ஷனில் குறிக்க வேண்டும். (ஆப்ஷன் E).

✅️இதேபோல் விடைத்தாளில் ஏ.பி.சி.டி.இ. என்று ஒவ்வொரு விடைக்கும் எத்தனை வட்டங்கள் கருமையாக்கப்பட்டன என்பதை கணக்கிட்டு அதன் எண்ணிக்கையை உரிய கட்டங்களில் நிரப்ப வேண்டும்.

✅️இதில் ஏதேனும் தவறோ, குளறுபடிகளோ தேர்வர்கள் செய்திருந்தால் 5 மதிப்பெண்கள் குறைக்கப்படும்.

தேர்வர்களின் நலனை கருத்தில் கொண்டும் தேர்வு முறையில் தவறுகள் நடந்துவிடக் கூடாது என்பதற்காகவும் இந்தக் கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளதாக டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.