திகிலூட்டும் பேய் கதைகள்- 02- நான் உன்னை நீங்க மாட்டேன்…!

0
724
       மனோகர் காட்டுப்பகுதியில் உள்ள காட்டு பங்களாவில், தனது மகன் மற்றும் மனைவியுடன் அமைதியாக வாழ்ந்து வந்தான். ஒவ்வொரு நாளும் அவனது வருமானம் குறைந்து வரவே அவனுக்கும் அவனது மனைவிக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட தொடங்கியது. 
      இந்த சண்டை நாளடைவில் வன்மமாக மாற, கணவனும் மனைவியும் முழு எதிரி ஆயினர். மனோகர், இனிமேல் இவளுடன் வாழ முடியாது என்பதை உணர்ந்து, ஒருநாள் மகன் உறங்கிய வேளையில், தனது மனைவியை தலையணைகளை முகத்தில் அழுத்தி வைத்து கொலை செய்தான். 
கொலை செய்து மனைவியின் உடலை ஒரு கோணிப்பையில் போட்டு கட்டி, தனது வீட்டிற்கு பின்புறமாக இருக்கும் ஏரியை நோக்கி தூக்கி நடக்கத் தொடங்கினான். 
பயமுறுத்தும் அந்த இரவு வேளையில் சுற்றி யாரும் இருக்கிறார்களா..? என்று பார்த்தபடியே ஏரியில் தான் கொண்டுவந்த கோணியை தூக்கி எறிந்தான் 
தூக்கி எறிந்த வேகத்தில் மூடையானது, ஏரி நீரை அழப்பியபடியே வேகமாக முழ்கத்தொடங்கியது. மூழ்கியதை உறுதி செய்து கொண்ட மனோகர், அம்மாவை எங்கே..? என்று மகன் கேட்டால், என்ன சொல்வது என யோசித்தவாறே வீடு திரும்பினான். 
இந்த சம்பவம் நடந்த இரண்டு நாட்கள் கழித்து ஒருநாள் இரவு நேரத்தில் மனோகர் தூக்கமின்றி தவித்தான். திடீரென ஏதோ சத்தம் கேட்க காற்றின் ஓசை மெதுவாக மாறியது. 
பயத்தில் திடீரென எழுந்த மனோகர் அருகில் படுத்திருந்த மகனைக் காணாது அதிர்ச்சி அடைந்தான். கட்டிலுக்கு கீழே இருக்கிறான் என்று தேடத் தொடங்கினான். ஆனால் அங்கு அவன் இல்லை என்பதை அறிந்து சப்தம் வந்த திசையை நோக்கி எழுந்து நடக்கத் தொடங்கினான். 
மாடிக்கு செல்லும் படியில் சத்தம் வருவதை அறிந்து அதை நோக்கி மனோகர் மெதுவாக நடக்கத் தொடங்கினான். அங்கு அவனது மகனைப் பார்த்த மனோகர் ஏன் இங்கு இருக்கிறாய்..? என்று கேட்டான். 
அதற்கு அவன் யாரோ இங்கு நிற்பது போலவும், அவனை அழைத்தது போலவும் இருந்தது என அவன் கூற, மனோகருக்கு சற்று நடுக்கம் ஏற்பட்டது. உடனே மனோகர் அதெல்லாம் ஒன்றுமில்லை என்று கூறி திரும்பிப் பார்த்துக்கொண்டே, மகனை வீட்டிற்கு அழைத்துச் சென்றான். 
அம்மா இறந்து ஒரு வாரம் ஆகியும் இன்னும் தனது மகன், அம்மாவை தேடாததும், அம்மா எங்கே என்று கேட்காததும் அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. 
இதைப்பற்றியே யோசித்துக்கொண்டிருந்த மனோகர், திடீரென்று அவனது மகனை அழைத்து, “அம்மா ஒரு வாரமாக வீட்டில் இல்லை… நீ அம்மா எங்கே என்று தேடவில்லை.. என்னிடம் அம்மா எங்கே என்று கேட்கவும் இல்லை.. ஏன்..? என்று கேட்டார். 
அதற்கு அவன் அதெல்லாம் ஒன்றுமில்லை. ஆனால் எனக்கு ஒன்று மட்டும் புரியாத புதிராகவே இருக்கிறது என்று கூறி அடுத்துச் அவன் கேட்ட கேள்வியில் மனோகர் பயத்தில் நடுங்கியே போனான். 
அப்படி அவன் கேட்ட கேள்வி என்ன தெரியுமா…? 
“எதுக்கு அப்பா..? அம்மா எப்பவும் உன் தோள் மேலேயே இருக்காங்க… கீழே இறங்க மாட்டேங்கிறாங்க…!” என்பதுதான். 
இதைக் கேட்டதும் தடுமாறிப் போன மனோகர், அருகில் இருந்த கண்ணாடியை பார்த்த பொழுது, அவன் தலையில் அவனது மனைவி பேயாக அமர்ந்திருந்தாள். 
முடிந்தது