பலம் வாய்ந்த யானை எப்படி மனிதனுக்கு கட்டுப்படுகிறது தெரியுமா?

0
346
     காட்டு விலங்குகளில் மிகவும் பலம் வாய்ந்தது யானைகள் ஆகும் . இத்தகைய யானைகளை, மனிதன் எப்படி தன் கட்டுக்குள் கொண்டு வருகிறான் என்பது தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்பட்டு போவீர்கள் 
      காட்டுக்குள் யானையை பிடிப்பதற்காக குழிதோண்டி அதன்மீது வைக்கோல், இலை, தழைகளை வைத்து மூடி வைத்திருப்பார்கள். அந்த வழியாக வரும் யானை அந்த குழிக்குள் விழுந்த உடன் கிட்டத்தட்ட சில நாட்களுக்கு அந்த யானைக்கு எந்த ஒரு உணவையும் வழங்க மாட்டார்கள். 
      யானை பசியால் மயங்கி வாடும் நிலையில், அதன் முன்பாக யானைப்பாகன் கையில் வைத்திருக்கும் கோலினை (சத்தியம் வாங்குவது போல) காட்டி காட்டி கொஞ்சம் கொஞ்சமாக உணவு அளிப்பான். 
      ஓரளவிற்கு யானை நன்கு பழகியதும் யானையை குழிக்குள் இருந்து வெளியே எடுத்து, நன்கு பழக்க படுத்துவார்கள். யானை கட்டுப்படாத நேரங்களில், யானைப்பாகன் காட்டிக் காட்டி உணவளித்த அந்த கோலினை காட்டுவான். கோலினைப் பார்த்ததும் அதற்கு தான் கொடுத்த சத்தியம் ஞாபகம் வரவே தன்னை கட்டுக்குள் வைத்துக் கொள்கிறது.