1.ஒரு நானோ மீட்டர் என்பது எத்தனை மீட்டர்?
2. ஹைட்ரஜன் அணுவின் விட்டம் எத்தனை நானோ மீட்டர்?
3. நானோ துகள்கள் எவற்றோடு தொடர்பு கொள்ளும்போது உறுதியற்ற தன்மையை அடைகிறது?
4. 'டிரக்யூ' என்ற பிரெஞ்சு மொழி சொல்லின் பொருள்?
5. ஹெபாரின் என்னும் மறுத்து எந்த மூலத்தில் இருந்து பெறப்படுகிறது?
6. கூற்றை ஆராய்க :- கூற்று: குளோரோஃபார்ம் தற்காலத்தில் பயன்படுத்தப்படுவது இல்லை, "காரணம் : இது ஆக்சிஜனுடன் வினைபுரிந்து கார்போனைல் குளோரைடு என்னும் நச்சை உருவாக்குகிறது"
7. கீழ் காண்பவற்றுள் வேறுபாடானதை கண்டறிக.
8. ஹைட்ரஜன் பெராக்சைடு எந்த சிகிச்சைக்காக பயன்படுத்தப்படுகிறது ?
9. அலெக்சாண்டர் பிளமிங் என்னும் அறிவியலாளர் கண்டறிந்த "நுண்ணுயிர் எதிரி" என்று அழைக்கப்படும் மருந்து எது ?
10. நம் வயிற்றில் சுரக்கும் அதிகப்படியான அமிலத்தை நீக்க பயன்படும் அமில நீக்கி?
11. வேதிமின்கலத்தின் இரு முக்கிய கூறுகள் எவை?
12. அரை மின்கலன்கள் பிரிக்கப்பட்டிருப்பது எதில்?
13. கோபால்ட் -60 என்ற கதிரியக்க ஐசோடோப்பு எந்த நோகை குணப்படுத்த பயன்படுகிறது?
14. புதைபடிவ மரங்கள் மற்றும் விலங்குகளின் வயதை தீர்மானிக்க உதவும் ஐசோடோப்பு எது?
15. பென்சாயிக் அமிலம் ஒரு _______
16. தடயவியலில் கைரேகையை கண்டறிய ஒளிரும் வண்ண சாயத்துடன் சேர்த்து எந்த வேதிப்பொருளின் சுவாலை பயன்படுகிறது?
17. மது அருந்தியவரை கண்டறியும் கண்டரியும் சோதனையில் நடக்கும் வேதிவினை__________.
18. taxonomy என்றால் என்ன?
19. கேனிஸ்ஃபேமிலியரிஸ் என்பது எதன் பெயர்?
20. எந்த தொகுதியை சேர்ந்தவை யானைக்கால் நோயை தோற்றுவிக்கும்?
21. பூமியின் மீது மனிதனுக்கு அடுத்ததாக அதிக ஆதிக்கம் செலுத்தும் என சிலரால் யூகிக்கப்படுகிறது எது?
22. நிமட்டோசிஸ்டுகள் என்றால் என்ன?
23. எந்த உயிரியின் மைய அமைச்சின் வழியாக உடலை பிரித்தால் மட்டுமே இரு சமமான பாகங்களாக உடலை பிரிக்க முடியும்?
24. இதயத்தில் நான்கு அறைகளைக் கொண்ட உயிரினம் எது?
25. தாய் சேய்இணைப்புத்திசு இல்லாத உயிரினம் எது?
26. நில வாழ் கணுக்கால்களில் கழிவு நீக்கம் எதன் மூலம் நடைபெறுகிறது?
27. சைலம் மற்றும் புளோயம் என்பவை தாவரத்தில் காணப்படும்_______.
28. தொடர்ந்து பகுப்பு அடையும் தன்மை கொண்ட ஒத்த அளவு உடைய முதிர்ச்சியடையாத செல்களின் தொகுப்பு?
29. இரு தகட்டெலும்புகளுக்கு இடையே உள்ள திரவம் நிரம்பிய இடைவெளிகள் ________ எனப்படும்.
30. உடலின் பல்வேறு பாகங்களுக்கு சமிக்ஞைகளை அனுப்பும் நரம்புத் திசுவின் பகுதி எது?
31. செல் பகுப்பின் மறைமுக பகுப்பு எனப்படுவது?
32. ஒரு தாய் செல்லில் இருந்து நான்கு சேய் செல்கள் உருவாகும் பகுப்பு?
33. இருபக்க சமச்சீர் உடைய, மூவடுக்குகள் கொண்ட, உடல்குழியற்ற விலங்கு எது?
34. தாடையற்ற முதுகெலும்பிகளுக்கு எடுத்துக்காட்டு:-
35. உரோமங்கள் போன்ற மென்மையான வெளி நீட்சிகளை பெற்றுள்ள தூண் எபிதீலியங்கள் ________ என்று அழைக்கப்படுகின்றன.
36. ஒளிச்சேர்க்கையின் முடிவில் குளுக்கோஸ் என்னவாக மாற்றப்படுகிறது?
37. தொட்டாசிணுங்கி தாவரத்தின் இலைகள் தொட்டவுடன் தளர்வது _________.
38. தூண்டலுக்கு ஏற்ப தாவரங்களின் ஒரு பகுதியோ அல்லது முழுத்தாவரமும் ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கி தன் இயக்கத்தை செலுத்துவது?
39. மிகப்பெரிய மனித செல் எது?
40. விந்தணுவிற்கு ஆற்றல் அளிக்கும் ஆதாரமாக _________ உள்ளது.
41. விந்தகத்தின் உட்புறத்தில் காணப்படும் சுருட்டப்பட்ட நுண்குழாய்கள் _______ என்று அழைக்கப்படுகின்றன.
42. சிறுநீரகத்தில் உள்ள ஹைலம் என்ற பகுதி எதற்காக பயன்படுகிறது?
43. ரத்தம் உறைதலை தடுக்கும் 'ஹெப்பாரின்' எந்த உறுப்பால் உற்பத்தி செய்யப்படுகிறது?
44. சிறுகுடலில் சுமார் எத்தனை குடல் உறிஞ்சிகள் உள்ளன?
45. நம் உடலில் காணப்படும் 'J ' வடிவ உறுப்பு எது?
46. உமிநீரில் பாக்டீரியாவை எதிர்க்கும் ________ நொதி உள்ளது.
47. நமது வாய்குழிக்குள் எத்தனை உமிழ்நீர் சுரப்பிகள் காணப்படுகின்றன?
48. தசையாலான சுருண்ட உழாய் போன்ற அமைப்பு எது?
49. தண்டுவடம் எந்த உறுப்பு மண்டலத்தில் இருக்கிறது?
50. உறுப்புகள் மற்றும் உறுப்பு மண்டலங்கள் முதன் முதலில் எந்த உயிரின தொகுதியிக் தோன்றியதாக கருதப்படுகிறது?