12வது முடித்தவர்களுக்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2021 !!
இந்திய ரயில்வே துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் தென்கிழக்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் இருந்து Sports Quota Posts (Sports Quota) பணியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள், தகவல்கள் என அனைத்தையும் வரிசைபடுத்தியுள்ளோம். திறமையானவர்கள் அதனை நன்கு ஆராய்ந்து அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நிறுவனம்: SECR
பணியின் பெயர்: Sports Quota Seats
பணியிடங்கள் :26
கடைசி தேதி 23.02.2021
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
ரயில்வே காலிப்பணியிடங்கள் :
Sports Quota Posts (Sports Quota) பணிகளுக்கு என 26 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
SECR வயது வரம்பு :
01.07.2021ம் தேதியினை பொறுத்து குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
ரயில்வே கல்வித்தகுதி :
Level 2 and Level 3 – 12வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Level 4 – அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் B.Sc டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Level 5 – அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Typing proficiency ஆனது ஆங்கிலத்திற்கு 30 W.P.M என்றவாறும், ஹிந்திக்கு 25 W.P.M என்றவாறும் இருக்க வேண்டும்.
SECR தேர்வு செயல்முறை :
Documents Verification மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
ரயில்வே விண்ணப்பக் கட்டணம் :
பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.500/- வங்கி கட்டணங்களை பிடித்ததன் பின்னர் ரூ.400/- வரை திரும்பி வழங்கப்படும்.
SC/SCA/ST விண்ணப்பதாரர்கள் – ரூ.100/- வங்கி கட்டணங்களை பிடித்ததன் பின்னர் முழு கட்டணம் திரும்பி வழங்கப்படும்.
தேவைப்படும் சான்றிதழ்கள் :
Date of Birth certificate, Education Qualification certificate, Sports achievements certificates, OBC certificates, OBC declaration, SC / ST certificate for SC / ST candidate, Minority community declaration for Minority community candidates, Format for EBC certificate, certificates of sports achievements at various levels achieved during 2018 – 2019, 2019 – 2020, 2020 – 2021, Latest colour Passport size photograph of the candidate, signature of the candidate.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 23.02.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.