ஆறு பற்றிய வினாக்கள்

0
1415

River system: Indian Geography question answer-TamilQ1. நர்மதா ஆறு எங்கு உருவாகிறது?

(A) மகாபல்லேஸ்வர் மலை

(B) நாசிக் குன்றுகள்

(C) அமர்கண்ட் மலை

(D) விந்திய மலைத்தொடர்

Ans: (C)

 மேற்கு நோக்கி பாயும் ஆறுகளில் மிகப்பெரிய ஆறு நர்மதா ஆறு ஆகும். இதன் நீளம் 1290 கி.மீ. நர்மதாவின் இரட்டை என்றழைக்கப்படும் ஆறு தப்தி

Q2. கீழ்கண்டவற்றுள் எது பிரம்மபுத்திரா நதியின் துணை நதி அல்ல?(A) மனாஸ்(B) லோகித்(C) டிஸ்டா(D) சிமாஸ்

Ans: (D) பிரம்மபுத்திரா ஆற்றின் துணை நதிகள் : திஷாங், திகாங், லோகித், மனாஸ், சுபன்ஸ்ரீ, டிஸ்டா, சங்கோஸ் ஆகியவை ஆகும்.

Q3. பாகிரதி மற்றும் அலக்நந்தா ஆறுகள் இணையும் இடம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?(A) கர்ணபிரயாக்(B) தேவபிரயாக்(C) ருத்ரபிரயாக்(D) விஷ்ணுபிரயாக்

Ans: (B) தேவபிரயாக் – அலக்நந்தா + பாகிரதி ; ருத்ரபிரயாக் – அலக்நந்தா + மந்தாகினி ; விஷ்ணு பிரயாக் – அலக்நந்தா + தௌலி ; கர்ணபிரயாக் – அலக்நந்தா + பிந்தர்.

Q4. 253மீ உயரம் கொண்ட ஷர்சோப்பா நீர்வீழ்ச்சி (ஜோக் நீர்வீழ்ச்சி) எந்த ஆற்றில் அமைந்துள்ளது?(A) சராவதி(B) மாஹி(C) கபினி(D) இந்திராவதி

Ans: (A) கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஜோக் நீர்வீழ்ச்சி ஷராவதி ஆற்றில் அமைந்துள்ளது.

Q5. கீழ்கண்டவற்றுள் கோதாவரி நதி உற்பத்தியாகும் இடம் எது?(A) ஆரவல்லி மலைத்தொடர்(B) நாசிக் குன்றுகள்(C) பிரம்மகிரி மலை(D) அமர்கண்ட் பீடபூமி

Ans: (B)

Q6. உலகின் மிகப்பெரிய ஆற்றுத்தீவான மஜீலி தீவு எங்கு அமைந்துள்ளது?(A) மேகலாயா(B) அருணாச்சல்(C) அஸ்ஸாம்(D) சிக்கிம்Ans: (C) அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள இந்த மஜூலி தீவானது பிரம்மபுத்திரா ஆற்றில் அமைந்துள்ளது.Q7. கீழ்கண்டவற்றுள் எது மேற்கு நோக்கி பாயும் ஆறு அல்ல?(A) தப்தி(B) மாஹி(C) சபர்மதி(D) துங்கபத்ரா

Ans: (D)

Q8. சிந்தி நதிநீர் ஒப்பந்தத்தின்படி இந்தியா சிந்து, ஜீலம் மற்றும் செனாப் நதியில் இருந்து வெளியேறும் நீரில் ____ ஐ பயன்படுத்திக் கொள்ளலாம்.(A) 20%(B) 25%(C) 28%(D) 30%

Ans: (A) 1960ம் ஆண்டு இந்தியா- பாகிஸ்தான் இடையே கையெழுத்தான சிந்து நதிநீர் ஒப்பந்தம் படி, இந்தியா சிந்து, ஜீலம் மற்றும் சீனாப் நதியில் இருந்து 20% ஐப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Q9. தீபகற்ப இந்தியாவின் மிக நீளமான நதி எது?(A) கிருஷ்ணா(B) கோதாவரி(C) மகாநதி(D) நர்மதா

Ans: (B) 1465 கி.மீ நீளம் கொண்ட கோதாவரி ஆறானது தென்னிந்தியாவின் நீளமான ஆறாகும். தென்னிந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஆறு கிருஷ்ணா நதியாகும்.

Q10. கீழ்கண்டவற்றுள் சாத்புரா மற்றும் விந்திய மலைகளுக்கு இடையே பாயும் நதி எது?(A) தப்தி(B) கிருஷ்ணா(C) நர்மதா(D) கோதாவரி

Ans: (C)

Q11. கங்கை நதியின் மிகப்பெரிய துணையாறு எது?(A) காக்ரா(B) காண்டக்(C) யமுனா(D) தாமோதர்

Ans: (C) கங்கை நதியின் துணையாறுகள்: யமுனை, கோசி, பாகிரதி, ஹீக்ளி, தாமோதர், காங்டக், காக்ரா, சோன், கோமதி போன்றவையாகும்.

Q12. மஞ்சரா, பென்கங்கா, வார்தா, இந்திராவதி போன்றவை எந்த நதியின் துணையாறுகள்?(A) கிருஷ்ணா(B) கோதாவரி(C) காவேரி(D) மகாநதி

Ans: (B)

Q13. மகாநதி எந்த மாவட்டத்தில் உருவாகிறது?(A) ஜார்கண்ட்(B) மத்திய பிரதேசம்(C) சத்தீஸ்கர்(D) ஒரிசா

Ans: (C) சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூரில் மகாநதி ஆறு உற்பத்தியாகிறது. இதன் முக்கிய துணையாறுகள்: டெல், மாண்ட், ஹாஸ்டோ.

Q14. “தக்சின் கங்கா” என்று அழைக்கப்படும் ஆறு எது?(A) கிருஷ்ணா(B) யமுனை(C) கோதாவரி(D) பிரம்மபுத்ரா

Ans: (C)

Q15. இந்திரா காந்தி கால்வாய் கீழ்கண்ட எந்த ஆற்றில் அமைந்துள்ளது?(A) சட்லஜ்(B) சீனாப்(C) ராவி(D) ஜீலம்

Ans: (A) இந்தியாவின் மிக நீளமான கால்வாய் – இந்திரா காந்தி கால்வாய். இது ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ளது.

Q16. சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி எந்த ஆற்றில் அமைந்துள்ளது?(A) கிருஷ்ணா(B) யமுனை(C) காவேரி(D) பிரம்மபுத்ரா

Ans: (C)

Q17. கங்கை நதியின் நீளம் என்ன?(A) 2325 கி.மீ(B) 2525 கி.மீ(C) 2720 கி.மீ(D) 2220 கி.மீ

Ans: (B) இந்தியாவின் தேசிய நதி கங்கை நதியாகும். இது 2525 கி.மீ நீளம் கொண்டது. இந்த ஆற்றின் கரையில் அமைந்துள்ள முக்கிய நகரங்கள்: வாரணாசி, பாட்னா, ஹரித்வார் போன்றவை.

Q18. சிந்து நதி இந்தியாவின் எந்தெந்த மாநிலங்கள் வழியாகப் பாய்கிறது?

1. ஜம்மு காஷ்மீர்

2. பஞ்சாப்

3. ராஜஸ்தான்

4. குஜராத்

(A) (1),(2),(3) மட்டும்

(B) (1),(2) மட்டும்

(C) (1) மட்டும்

(D) இவை அனைத்தும்

Ans: (C)

Q19. கிருஷ்ணா நதி உற்பத்தியாகும் இடம் எது?(A) நாசிக் குன்றுகள்(B) மேற்கு தொடர்ச்சி மலை(C) அமர்கண்ட் மலை(D) மகாபல்லேஸ்வர் மலை

Ans: (D)

Q20. சந்திரா மற்றும் பாகா ஆறுகள் இணைவதால் எந்த நதி தோன்றுகிறது?(A) ஜீலம்(B) சட்லஜ்(C) சீனாப்(D) ராவி

Ans: (C)