Sony Ps5 அதிரெடி தள்ளுபடி அனைவருக்கும் கிடைக்குமா?

0
346

உலகின் முன்னனி கேமிங் நிறுவனமான சோனி நிறுவனத்தின் பிளே ஸ்டேஷன் 5 (PS 5)இப்போது 5000 ரூபாய் தள்ளுபடி ஆஃபர் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இந்த ஆஃபர் அமலுக்கு வரும் எனவும் இது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சாதனங்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் Sony Playstation 5 விலை அதிகமானது.

ஆனால் கோடைகால ஆஃபராக Sony Disc Version 39,900 ரூபாய் விலையிலும், Bundle edition Sony PS5 54,990 ரூபாய் விலையிலும் இனி கிடைக்கும். இந்தியாவில் உள்ள GAME பிரியர்கள் அதிகமாக விரும்பும் PlayStation 5 மாடல் விலையும் குறைக்கப்பட்டுள்ளதால் பலருக்கும் இது கொண்டாட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த PS5 standard மாடல் 49,990 ரூபாய்க்கு, Digital Edition 39,990 ரூபாய்க்கு, PS5 bundle Pack 54,990 ரூபாய் விலைக்கும் விற்கப்படுகிறது. 50 ஆயிரம் ரூபாய் விலைக்கு கீழ் வந்துவிட்டதால் நிச்சயம் இது விற்பனையில் உச்சத்தை தொடும் என எதிர்பார்க்கலாம்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து தற்போது வரை 20000 PS5 கருவிகள் இறக்குமதி செய்யயப்பட்டுள்ளதாக சோனி அறிவித்துள்ளது. இதன் அதிகாரபூர்வ விலை விரைவில் வெளியாகும்.

.