இன்றைய ராசிபலன் (22-09-2022)

0
505

பன்னிரண்டு ராசிக்காரர்களுக்குமான இன்றைய பொதுப்பலன் கீழே கொடுக்கப்பட்டுள்ளதுஇந்த நாள் அனைவருக்கும் இனிய நாளாக அமைய தமிழ்மடல் வாழ்த்துகிறது.

1.மேஷம்

மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலம் தரக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. எந்த ஒரு முடிவையும் எடுப்பதற்கு தயங்க வேண்டாம். சுய தொழிலில் நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தங்கு தடை இல்லாத பண வரவு எதிர்பார்த்த அளவிற்கு இருக்கும்.

ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எடுக்கக்கூடிய முக்கிய முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும். பொருளாதார முன்னேற்றம் சிறப்பாக இருக்கக்கூடும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு புதிய சிந்தனைகள் பிறக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுமை தேவை. அவசரம் தேவையற்ற பிரச்சனைகளை கொண்டு வந்து சேர்க்கும்.

3.மிதுனம்

மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எந்த ஒரு விஷயத்திலும் அமைதி காப்பது நல்லது. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் செய்ய வேண்டாம். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். சுய தொழிலில் லாபம் காண்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத நேரத்தில் பழைய நண்பர்களை சந்திக்க வாய்ப்புகள் கிடைக்கும்.

கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும். கணவன் மனைவி உறவில் விரிசல் விழாமல் இருக்க விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. சுய தொழிலில் நீங்கள் புதிய முயற்சிகளை செய்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மற்றவர்களால் தொந்தரவு ஏற்படலாம் எனவே விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது.

5.சிம்மம் 

சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மகிழ்ச்சியாக காணப்படக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. சுப காரிய தடைகள் விலகி வெற்றி வாய்ப்புகளை பெறுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பிரச்சனைகளை பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். சுய தொழிலில் எதிர்பார்த்தது நடக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு முயற்சிகள் பலன் அளிக்கும்.

6.கன்னி

கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நல்ல பலன்களை கொடுக்கக்கூடிய நாளாக இருக்கிறது. நீங்கள் இதுவரை முயற்சித்துக் கொண்டிருந்த விஷயங்களுக்கு உரிய பலன்களை அனுபவிக்க வாய்ப்புகள் கிடைக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சாதாரணமான விஷயம் கூட பெரிதாக தெரியக்கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மன இறுக்கம் தளரும்.

துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சவாலான விஷயங்களை சந்திக்க இருக்கிறீர்கள். கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் சிறு சிறு பிரச்சனைகளை பேசி பெரிதாக வேண்டாம். சுய தொழிலில் உள்ளவர்கள் எதிலும் பொறுமையுடன் இருந்தால் வெற்றி வாய்ப்புகளை பெறலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு.

8.விருச்சிகம் 

விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த நாளாக இருக்கப் போகிறது. கணவன் மனைவி இடையே தேவையற்ற பேச்சு வார்த்தைகளில் வாக்குவாதங்களை வளர்க்க வேண்டாம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு மறைமுக எதிரிகளின் தொல்லை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு எனவே விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

9.தனுசு 

தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் செய்யும் வேலைகளில் இடையூறுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. நீண்ட கால முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சுற்றி இருப்பவர்கள் தேவையற்ற பிரச்சனைகளில் மாட்டி விட வாய்ப்புகள் உண்டு கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஆதிக்கம் செலுத்தும் அமைப்பு உண்டு.

10. மகரம் 

மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மனமகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். எதிலும் உங்களுக்கு வெற்றி வாய்ப்புகள் குவிய போகிறது. சுப காரிய முயற்சிகளில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். சுய தொழிலில் உள்ளவர்கள் மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகளை கேட்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பண ரீதியான விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

11.கும்பம் 

கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் தேவையில்லாத அலைச்சல்களை சந்திக்க வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி இடையே புரிதல் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சமூக ரீதியான அந்தஸ்து கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கொடுத்த கடன் திரும்ப கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியம் சீராகும்.

12.மீனம்

மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வளம் தரும் இனிய நாளாக இருக்கப் போகிறது. திருமண காரியங்கள் தடையில்லாமல் நடக்கும். கணவன் மனைவிக்கு அன்பு அதிகரிக்கும். சுய தொழிலில் இருப்பவர்களுக்கு வரவிற்கு மீறிய செலவுகள் வரக்கூடும் எனவே கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதையும் போராடித்தான் பெற வேண்டி இருக்கும், சுலபமாக கிடைக்காது.