இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் தன்னார்வலர்கள்
பங்குபெறுவது எப்படி?
1 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில்
கற்றல் இடைவெளியி னை குறைக்கும் நோக்கில் இல்லம் தேடிக் கல்வி என்ற
திட்டத்தை பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இத்திட்டத்தை தன்னார்வலர்கள்
மூலமாக செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தில் தன்னார்வலர்கள்
தங்களை ஈடுபடுத்திக்கொள்ள பள்ளி கல்வித்துறையால் தனி இணையதளம்
தொடங்கப்பட்டுள்ளது. http://illamthedikalvi.tnschools.gov.in/ என்ற இணையதளத்தில்
சென்று தங்களை பற்றிய தகவல்களை பதிவேற்றம் செய்து தன்னார்வலர்களாக
இணைந்துகொள்ளலாம்.
இல்லம் தேடிக் கல்வி ஒரு தன்னார்வ தொண்டு. கொரோனா பெருந்தொற்றுப் பரவல்
சார்ந்த பொது முடக்க காலங்களில் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு
வரை பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை சரி செய்ய
இல்லம் தேடிக் கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. பள்ளி முடிந்த பின்பு
மாலை நேரங்களில் ‘இல்லம் தேடிக் கல்வி” மையங்களில் கற்பித்தல் சேவையை
மேற்கொள்ள உள்ள தன்னார்வலர்கள் பதிவு செய்ய ஏதுவாக, படிவம் இவ்விணைய
தளத்தில் வழங்கப்பட்டு உள்ளது.
தன்னார்வலர்கள்…
வாரத்திற்கு குறைந்தது ஆறு மணி நேரம் குழந்தைகளுடன் செலவிட தயாராக
இருக்க வேண்டும் (அல்லது) பகுதி நேரமாகவும் தன்னார்வலராக இருக்கலாம்.
கண்டிப்பாக குழந்தைகளுடன் உரையாட தமிழ் தெரிந்திருக்க வேண்டும்
தமிழ், ஆங்கிலம், மற்றும் கணிதம் கற்றுத்தர வேண்டும். (பயிற்சிகளும்
உபகரணங்களும் வழங்கப்படும்)
யார் நிர்பந்தமும் இன்றி தன்முனைப்பாக பங்கேற்க வேண்டும்
குறைந்தபட்சம் 17 வயது நிரம்பி இருத்தல் அவசியம்.
விண்ணப்பிக்க:
கீழே உள்ள click here பட்டனை கிளிக் செய்து விண்ணப்பித்து கொள்ளுங்கள்..
I do my work properly
I did BA english.Now I do b. Ed english annamalai university
I can speak English
I now very will in grammer
I would teach a students easy method
I intrested to teach illam thadi kalvie
I would teach grammer easy way to students
I cantrol a students silent
I can put effort to students
I can teach a student’s easy method
I can control a students silent way.