+2 பொது தேர்வு தமிழகத்தில் ரத்து | தமிழக அரசு அறிவிப்பு

0
237

பெருந்தொற்றை கருத்தில் கொண்டு நீண்ட நெடிய ஆலோசனைக்கு பின்பு தமிழக அரசு +2 பொது தேர்வை ரத்து செய்து செய்தி வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே CBSE +2 தேர்வுகளை பிரதமர் ரத்து செய்து அறிவித்த நிலையில் தமிழகத்திலும் ரத்து செய்யப்படும் என்று பலராலும் கணிக்கப்பட்ட நிலையில், இந்த பெருந்தொற்று நேரத்தில் தேர்வு நடத்துவது சாத்தியம் கிடையாது என்பதால் தமிழகத்திலும் ரத்து செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாகவே பல கருத்து கேட்பு நிகழ்வுகளும், ஆலோசனை கூட்டமும் நடைபெற்று வந்தது. தாமதமாய் இருந்தாலும் தேர்வை நடத்த வேண்டும் என்று சிலர் கருத்து தெரிவித்தாலும் தேர்வு வைப்பது இப்போது இருக்கும் சூழ்நிலையில் சாத்தியமே இல்லை என்பதால் , இந்த ஆண்டு +2 தேர்வு இரத்து செய்யப்படுகிறது.