வேலைவாய்ப்பு பதிவை ஆன்லைன் மூலம் புதுபிப்பது எப்படி? | எளிய வழிமுறை

0
1214
employment

2017,2018,2019 ஆண்டில் தங்கள் வேலைவாய்ப்பு பதிவை புதுபிக்க தவறியவர்கள் மீண்டும் புதுபிக்க ஓரு அறிய வாய்ப்பை வழங்கி அரசானை வெளியானதை அனைவரும் அறிவோம்.
தமிழக அரசால் சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்பட்டுள்ளதால் ஜனவரி 2017 முதல் டிசம்பர் 2019 வரை, வேலைவாய்ப்பு பதிவினை புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள், இணையதளம் வாயிலாக தங்கள் பதிவினை 27.08.2021க்குள் புதுப்பித்துக் கொள்ளலாம்

வீட்டிலிருந்தே மொபைல் அல்லது கணினியில் எவ்வாறு ஆன்லைன் புதுபித்தல் செய்ய வேண்டும் என்பதற்கான வழிமுறை.

STEP 1
முதலில் வேலைவாய்ப்புதுறை இணைய பக்கத்திற்கு செல்ல கீழே இருக்கும் லிங்கை கிளிக் செய்யவும்.

STEP 2

சர்வர் பிஸி காரணமாக மேற்கண்ட பக்கம் லோட் ஆவதில் தாமதம் இருந்தால் மீண்டும் முயற்சிக்கவும்.

Click on renewal Click Here

மேற்கண்டவாறு திறக்கும் பக்கத்தில் Renewal – Click Here என்பதில் கிளிக் செய்க.

STEP -3

மேற்கண்ட பக்கத்தில் உங்கள் USER NAME மற்றும் PASSWORD உள்ளீடு செய்து login செய்யவும்.
PASSWORD மறந்துவிட்டீர்கள் என்றால் FORGET PASSWORD கொடுத்து மாற்றி கொள்ளலாம்.

[ பொதுவாக USER NAME உங்கள் EMPLOYMENT ID CARD-ல் இருக்கும் பதிவு எண்ணாகவும் PASSWORD உங்கள் பிறந்த தேதியாகவும் இருக்கும்.]

STEP- 4

STEP-3 ல் கண்டதுபோல் கேட்கும் LOGIN பக்கத்தில் உங்கள் USER NAME & PASSWORD உள்ளீடு செய்தவுடன் கீழ் கண்டவாறு முகப்பு பக்கம் காணப்படும்.அதில் உங்கள் பெயர் ஈ-மெயில் போன்ற விபரங்கள் காண்பிக்கும்.

மேற்கண்ட பக்கத்தில் குறிப்பிட்டு காட்டியது போல update profile என்பதில் கிளிக் செய்தால் அதில் கீழ்கண்ட படத்தை போன்று Update Profile > Renewal > Candidate Renewal போன்ற தெரிவுகள் வருவதை பார்க்க முடியும்.

மேற்கண்ட பக்கத்தில் Candidate Renewal என்பதை கிளிக் செய்த பின்பு கீழ் கண்ட ஒரு செய்தி காண்பிக்கப்படும்.

STEP- 5

மேற்கண்ட செய்தியில் ok கொடுத்த பின்பு கீழ் கண்ட பக்கத்தில் உள்ளது போல உங்கள் பதிவு எண் , பெயர் போன்ற விபரங்கள் மற்றும் Status – Lapsed என்று காண்பிக்கப்பட்டிருக்கும். அதில் Renew என்ற தெரிவை கிளிக் செய்ய வேண்டும்.

Renew பட்டணை கிளிக் செய்த பிறகு request in Progress என்று லோட் ஆகும். பின்பு கீழே காண்பிக்கப்பட்டது போல “உங்கள் பதிவு எண் புதுபிக்கப்பட்டது எனவும் அடுத்து புதுபிக்க வேண்டிய தேதியும் ஆங்கிலத்தில் காட்டப்படும்”

அவ்வளவுதான் எளிமையாக உங்கள் வேலைவாய்ப்பு பதிவு புதுப்பிக்கப்பட்டது. இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள் அவர்களும் பயன்பெறட்டும்.

you may need this following post also

இரண்டு நிமிடத்தில் பான் கார்டுடன் ஆதாரை இணைப்பது எப்படி? கடைசி நாள் ஜூன் 30, 2021