SBI APP, NET BANKING 14 மணி நேரம் செயல்படாது

0
225

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா நாட்டின் மிகப்பெரிய வங்கி சேவையை வழங்கி வருகிறது. எஸ்பிஐக்கு இந்தியாவில் 22,000 கிளைகளும், 57,889 ஏடிஎம்களும் உள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாத கணக்கீட்டின் படி 85 மில்லியன் இன்டர்நேட் பேங்கிங் மற்றும் 19 மில்லியன் மொபைல் பேங்கிங் பயனாளர்களையும் கொண்டுள்ளது.

மக்களின் வசதிக்காக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா சார்பில் Yono மற்றும் Yono Lite ஆப்கள் நடைமுறையில் உள்ளன. இந்த ஆப் ஆண்ட்ராய்டு, மற்றும் ஐஓஎஸ் என அனைத்துவிதமான ஸ்மார்ட் போன் பயனாளர்கள் பயன்படுத்தும் வகையில் கிடைக்கிறது. இந்த ஆப்களின் மூலம் மக்கள் பணப்பரிவர்த்தனைகள், டிக்கெட் புக்கிங், ஆன்லைன் ஷாப்பிங், பணம் செலுத்துதல், ரீசார்ஜ் போன்ற சேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றன.

மேலும் எஸ்பிஐ YONO 34.5 மில்லியன் பதிவு செய்யப்பட்ட பயனாளர்களை கொண்டுள்ளது. மேலும் 9 மில்லியன் பயனாளர்கள் தினமும் YONO பயன்படுத்துகின்றனர். மேலும் கடந்த டிசம்பரில் YONO மூலம் 1.5 மில்லியன் புதிய கணக்கு துவங்கப்பட்டிருப்பதாகவும், 91 சதவிகித சேமிப்பு கணக்காளர்கள் YONO பயன்படுத்த துவங்கியிருக்கிறார்களாம்.

இந்த ஆப்கள் தர மேம்பாட்டு பணிகளுக்காக இன்று (22/05/2021) நள்ளிரவு 12 முதல் நாளை (23/05/2021) பகல் 2 மணி வரை செயல்படாது என அறிவித்துள்ளனர். இதன் காரணமாக இண்டர்நெட் பேங்கிங், YONO மற்றும் YONO Lite ஆகியவை செயல்படாது என அறிவித்துள்ளது. RTGS(Real-time gross settlement) பணிகள் வழக்கம் போல நடைபெறும்.

இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் வங்கி அறிவித்துள்ளதாவது, எல்பிஐ-யின் ஆன்லைன் சேவைகள் அனைத்தும் இந்த நேரத்தில் செயல்படாது. அதாவது மே 23 இரவு 12.01 முதல் மதியம் 2 மணி வரை இந்த சேவைகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. இவை பராமரிப்பு பணிகளுக்காக செயல்படாது என்றும், நாங்கள் சிறப்பான வங்கி சேவையை வழங்குவதற்காக முயற்சிக்கிறோம், வாடிக்கையாளர்கள் எங்களுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

முன்னதாக கடந்த மே 7 முதல் 8 அன்று பராமரிப்பு காரணமாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் ஆன்லைன் சேவைகள் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. எஸ்பிஐ வீட்டுக் கடனுக்காக தனது வட்டி விகிதத்தை குறைத்து சுமார் ரூ.30 லட்சம் வரையிலான கடனுக்கு 6.70 சதவிகிதமாக உள்ளது. மேலும் ரூ.30 லட்சம் முதல் ரூ.75 லட்சம் வரையிலான வீட்டுக்கடனுக்கு 6.95 சதவிகிதமாகவும் வட்டியை நிர்ணயம் செய்துள்ளது. ரூ.75 லட்சத்துக்கு மேலான வீட்டுக்கு கடனுக்கு 7.05 சதவிகிதமாக நிர்ணயித்துள்ளது. மேலும் YONO மூலம் கடனுக்கு விண்ணப்பித்தால் வாடிக்கையாளர்களுக்கு 5 பேஸிஸ் பாயிண்ட்கள் குறையும். கடன் பெறும் பெண்களுக்கு சிறப்பு சலுகையாக 5 பேஸிஸ் பாயிண்ட்கள் குறையும் என எஸ்பிஐ தெரிவித்துள்ளது.