கருப்பு பூஞ்சையை விட வெள்ளை பூஞ்சை ஆபத்தானதா ? – மருத்துவர்கள் ரிப்போர்ட்

0
136


கருப்பு பூஞ்சை மற்றும் வெள்ளை பூஞ்சை குறித்து பல்வேறு சந்தேகங்கள் இருக்கின்றன.

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் உச்சகட்டத்தில் இருக்கிறது. கொரோனாவின் எப்பொழுது குறையும் என மக்கள் பரிதவித்து வரும் வேளையில் அவர்களை கருப்பு பூஞ்சை மற்றும் வெள்ளை பூஞ்சை பற்றிய செய்திகள் அவர்களை மேலும் பீதியடையச் செய்துள்ளது. கருப்பு பூஞ்சை மற்றும் வெள்ளை பூஞ்சை குறித்து பல்வேறு சந்தேகங்கள் இருக்கின்றன.

வெள்ளை பூஞ்சை கருப்பு பூஞ்சையை போன்று ஆபத்தானதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில் டெல்லியை சேர்ந்த மருத்துவர் சுரேஷ் குமார், கருப்பு பூஞ்சைகளைப் போல வெள்ளைப் பூஞ்சைகள் ஆபத்தானது அல்ல. முன் கூட்டியே கண்டறியப்பட்டால் அதற்கு ஒன்று முதல் ஒன்றரை மாத காலம் வரை சிகிச்சையளித்து குணப்படுத்த முடியும். உங்கள் மருத்துவரைக் கேட்காமல் கொரோனாவுக்கு மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டாம். குறிப்பாக ஸ்டெராய்டு (Steroids)களை மருத்துவர்களின் அனுமதியின்றி எடுத்துக்கொள்ள வேண்டாம்.

உங்கள் சுற்றுப்புறங்களை எப்பொழுதும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். பிரிட்ஜில் வைத்த பழங்கள்,காய்கறிகளை உண்ணாமல், எப்பொழுதும் ஃபிரெஷ்ஷான காய்கறி, பழங்களை உண்ணுங்கள் என்றார். இந்த வகை பூஞ்சை , நெருக்கடியான இடங்களிலும், ஈரப்பதமான இடங்களிலும் வளருமாம். உங்கள் வீட்டுக்கு சூரிய வெளிச்சம் வரும்படி கதவுகளை திறந்து வையுங்கள். உங்கள் முககவசங்களை தினமும் துவைத்து உபயோகியுங்கள் என்றார்.

பல மருத்துவர்களும் வெள்ளை பூஞ்சை பொய்யானவை அல்லது தவறான புரிந்துகொள்ளப்பட்டவை என்கிறார்கள். இது கண்டிடியாசிஸ் (Candidiasis)எனப்படும் ஒரு வகையான பூஞ்சை தொற்று. இது பொதுவான ஒரு பூஞ்சை தொற்று என்கிறார் தொற்று நோய் சிறப்பு மருத்துவர் ஈஸ்வர் கிலடா.

மேலும் மருத்துவர் கபில் சல்ஜியா, Mucormycosis தான் மிகவும் ஆபத்தானது. ஆனால் கேண்டிடாசிஸ்-ஐ வாக கண்டறிந்து தீர்வு காணமுடியும். பெரும்பாலான நேரங்களில் இது உயிருக்கு ஆபத்தானவை அல்ல. ஆனால் நீங்கள் அதற்காக மருத்துவம் எடுத்துக்கொள்ளாமல் இருந்தாலோ தான் பிரச்சனை என்கிறார் அவர். இது மக்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் என்பது உறுதி.

இந்த வெள்ளைப் பூஞ்சையானது வழக்கமான கொரோனாவுக்கான அறிகுறிகள் தான் தென்படும். ஆனால் பரிசோதனை மேற்கொண்டால் நெகட்டிவ் என்று வருமாம். எனவே HRCT ஸ்கேன் பரிசோதனை செய்துகொண்டால் அதனை கண்டறியலாம் என மருத்துவர்கள் நம்புகின்றனர். இந்த வெள்ளைப் பூஞ்சையினால் ஏற்படும் மரணங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

நமக்கு அறிகுறிகள் எதுவும் தென்பட்டால் உடனடியாக மருத்துவர்களை அணுகி பரிசோதனைகள் செய்து கொள்வது நல்லது. கொரோனா, கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை ஆகிய எந்த பிரச்சனைகளுக்கும் தொடக்க நிலையிலேயே கண்ட்றிந்தால் குணப்படுத்துவது எளிது என மருத்துவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் நோய் அறிகுறிகளை இலகுவாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.