கொரோனாவிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க எளிய வழிமுறைகள் இதோ…

0
134

உங்கள் குழந்தைகளுக்கு ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகி கோவிட் பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்படுகிறது. மேலும், குழந்தைகள் முகக்கவசம் அணிதல், கிருமிநாசினி பயன்படுத்துதல் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும்

COVID-19 நோய்த்தொற்றின் இரண்டாவது அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இந்தியாவில் கடந்த ஆண்டு, கொரோனா தொற்றில் குழந்தைகள் குறைவாகவே பாதிக்கப்பட்டு இருந்தனர். ஆனால் இந்த ஆண்டு அதிகம் பாதிக்கப்படக்கூடிய நிலையில் குழந்தைகளே உள்ளனர்.

மும்பை ஃபோர்டிஸ் மருத்துவமனையின் மூத்த குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் ஜெசல் ஷெத் கூறுகையில், குழந்தைகளுக்கு லேசான அறிகுறிகள் இருப்பதாகவோ அல்லது அவர்கள் அறிகுறியற்ற மற்றும் நோய் தொற்றை பரப்ப வாய்ப்புள்ள, சூப்பர் ஸ்ப்ரெடர்களாகவோ இருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும், குழந்தைகளுக்கான அறிகுறிகளாக சொறி, இரைப்பை குடல் அறிகுறிகள், பலவீனம், தொடர்ந்து காய்ச்சல், சுவாச பிரச்சினைகள் மற்றும் வறட்டு இருமல் ஆகியவை இருக்கலாம். குழந்தைகள் வைரஸை விரைவாகப் பரப்புவதாகத் தெரிகிறது, ஆனால் அவற்றின் தாக்கம் குறித்து மருத்துவர்களுக்கு சரிவர தெரியாததால் மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

எனவே, உங்கள் குழந்தைகளுக்கு ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகி கோவிட் பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்படுகிறது. மேலும், குழந்தைகள் முகக்கவசம் அணிதல், கிருமிநாசினி பயன்படுத்துதல் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும்.

குழந்தைகளுக்கான நோய் தொற்று அபாயத்தை குறைக்க மருத்துவர் செய்யும் பரிந்துரைகள்

சமூக இடைவெளி

சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைப்பிடிக்கவும்.

தேவையின்றி, விருந்தினர்களுடன் அல்லது வெளியாட்களுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்கவும்.

குழந்தைகளுக்கான வெளிப்புற விளையாட்டு மற்றும் நண்பர்களுடனான  சந்திப்பை தவிருங்கள். வீட்டுக்குள்ளேயே விளையாட்டுகளை விளையாட அவர்களை ஊக்குவிக்கவும், நண்பர்களுடன் தொலைப்பேசி உரையாடல்களுக்கு மட்டும் அனுமதிக்கவும்.

பொது இடங்களில் முகக்கவசத்தை மூக்குக்குக் கீழே அல்லாமல் சரியாக அணியுங்கள்.

சுய சுகாதாரம்        

கண்கள், மூக்கு மற்றும் முகத்தைத் தொடுவதைத் தவிர்க்கவும்.

குறிப்பிட்ட இடைவெளியில் கைகளைக் கழுவி சுத்தம் செய்யுங்கள்.

தும்மும்போது அல்லது இருமும்போது முகத்தையும் வாயையும் மூடிக்கொள்ளுங்கள்.

கிருமிகள் அல்லது தொற்று பரவாமல் இருக்க, உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் வீட்டிலேயே இருங்கள்.

வீட்டு சுகாதாரம்

எந்தவொரு தொற்றுநோயையும் குறைக்க, அதிகம் தொடக்கூடிய பகுதிகளை அடிக்கடி கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யுங்கள்.

கதவு, மேசைகள், நாற்காலிகள், போன்றவற்றை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள்.

காலணிகளை வெளியே விடவும்

மூடியுடன் கூடிய குப்பைத்தொட்டியை பயன்படுத்தவும்.

உணவுப் பொருட்களை சுத்தம் செய்த பின் பயன்படுத்தவோ அல்லது சேமித்து வைக்கவோ வேண்டும்.

மேற்கூறிய பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்து உங்கள் குழந்தைகளை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்.